பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

அரசன் கண்டு வியக்கும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தினாள் என்பதும் இக் கல்லெழுத்தால் அறியலாம்.

வீரராசேந்திர சோழனது திருவொற்றியூர்க் கல்வெட்டு ஒன்று[1]6, மணலி என்னும் ஊரிலிருந்த 60 வேலி நிலத்தை வீரராசேந்திர விளாகம் என்னும் பெயர் அமைத்து அரசனது ஆயுஷ்யார்த்தமாகவும், அரசியாரது திருமாங்கலியத்தைக் காத்தற்பொருட்டும், அவருடைய குழந்தைகளின் நலன்பொருட்டும், திருவொற்றியூர்த் திருக்கோயிலில் சில தருமங்கள் செய்ய ஏற்பாடு செய்ததை உணர்த்துகின்றது. திருப்பள்ளி எழுச்சிக்காகவும், திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை விண்ணப்பம் செய்வதற்காகவும், நடித்தும் பாடியும் தொண்டு செய்து வந்த 22 தளியிலார்க்கும், ஓர் ஆடலாசானுக்கும் அகமார்க்கத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் 16 தேவரடியார்களுக்கும் அளித்தற்பொருட்டு இந்நில வருமானம் ஒதுக்கப் பெற்றது. இக் கல்லெழுத்தினின்று தேவாரங்கள் பாடும் பொழுது சுவை பொருந்தச் சத்துவம் தோன்ற அபிநயத்தோடு பாடப் பெற்றன என்றும் அறிகிறோம்.

வரிக்கோலம்; சந்திக் குனிப்பம்; சொக்கம்

வரி என்பது விலக்குறுப்புப் பதினாகனுள் ஒன்று;[2] வரி எட்டு வகைப்படும்;[3] சொக்கம் என்பது சாந்திக் கூத்துள் ஒரு வகை. சந்திக் குனிப்பம் என்பதும்


  1. 128 of 1912
  2. சிலப். அடியார்க்கு நல்லாருரை-பக்கம் 82
  3. ௸ ௸-பக்கம் 88