பக்கம்:கல்வி எனும் கண்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. முதியோர் கல்வி

இந்தியா உரிமை பெற்று நாறபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அப்பொழுதே எல்லாருக்கும் (3-15) வயதுச் கல்வி அறிவு தரவேண்டும் என்ற முயற்சியில் நாடு ஈடுபட்டு. இருந்தால் இன்று 50 வயதுக்கு உட்பட்டவர் அனைவரும் கற்றவர்களாகவே இருப்பர். இன்று மருத்துவப் பட்டம் பெறுபவர் அரசாங்க்ப் பணியில் சேர விரும்பினால் ஓராண்டு கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதி கொண்டு வரப் போவதாகக் கூறுகின்றனர். சாதாரணப் பட்டம் பெற விரும்புவர்களுக்கும் படிப்பு முடிந்தபின் ஓராண்டு கிராமத்தில் பணிபுரிந்தால்தான் பட்டம் பெறமுடியும் என்று ஏற்பாடு செய்யவேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். இந்தக் கருத்தினைத்தான், நான் முன்னரே குறித்தபடி, 1947இல் சுதந்திரம் பெற்ற உடனே இந்தியா முதல்சட்டமாக இந்த முறைக்கு ஏற்ப, ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்று ‘இந்திய முதற் சட்டம்’ என்ற நூலில் எழுதினேன். அதில் பட்டம் பெறுபவர் ஓர் ஆண்டில் கிராமங்களில் சென்று, அங்கேதங்கி, அவர்களொடு பழகி, அவர்தம் ஏற்றத் தாழ்வுகள் அறிந்து, துயர்துடைத்து, கல்வி அளித்து, தொழில்பெருக வழிகண்டு என்னென்ன செய்ய வேண்டும் என விளக்கியுள்ளேன். நாடகமணி T.K. சண்முகம் அதைப் பாராட்டித் தாம் அதனை நாடகமாக நடத்த விரும்புவதாகவும் கூறினார். இரண்டொரு பள்ளிகள் நடித்தன. அந்நூலுக்கு அன்றைய கல்வி அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. பக்தவத்சலம் அவர்களும் பாராட்டி முன்னுரை தந்துள்ளார்கள். எனினும் இந்த முறை இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றும் பின்பற்றப் பெறவில்லை. இம்முறை அன்றே வழக்கத்தில்,