பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 லா, ச. ரா.

முறிக்கறதென்ன? இந்த ஆபிஸ்ை மானேஜரா நடத்த நான். பியூன்னா நடத்தறான்!”

அப்போத்தான் காஷ் கூண்டில் நாற்காலியில் எம்பி உட்கார்ந்தார்.

“Mr. Manager!”

    • Yes?”

“@#34, 52(5 fake note.”

“இதோ வந்துட்டேன்.”

அவர் பார்வை என்மேல் விழுந்தது.

‘தம்பி, இங்கேயே கூண்டு வாசல்லே நில்.’

அந்த முகத்தில் கலவரம் இல்லை. நீளோட்டிய நோய், கவலைகள் இம்சைகளில் நாளடைவில் அழகு சிதைந்த முகம். கையில் நான் மோதிரம் பார்க்கவில்லை. ஆனால் மோதிரக்கை. புகையிலையை அடக்கிக் கொண் டாலும் உலகத்தைக் கொட்டை உமிழ்ந்த வாய்.

மானேஜர் ஸார், உங்களால் எனக்கு வேலை கி ைட த் தால் கிடைக்கட்டும்; கிடைக்காவிட்டால் போகிறது.

அது என் அதிர்ஷ்டம். ஆனால் உங்கள் புள்ளி குறைந்து விடுமா என்ன.

நான் casablanca நின்ற இடத்திலிருந்தே மானேஜர் அறையில் நடப்பதெல்லாம் கேட்கிறது. தெரிகிறது. அவர் என்ன மெலிந்த குரலிலா பேசுகிறார் ? ஒளி மறைவு என்பதே அவரிடம் கிடையாது. அப்படி இருப் பதில் அவருக்கு ஒரு தனிவீம்பு, அகம்பாவம்ே இருந்த் தென்பதைப் பின்னால் கண்டு கொண்டேன்.

“என்னப்பா காசி, கள்ள நோட்டு லிஸ்ட்டைக் கொட்டையாஎழுதி அட்டையில் ஒட்டிக் கண்ணெதிரே தானே தொங்கறது!”