பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i48 லா.ச.ரா.

  • அம்பி, ஏறு. வழியில் மண்டையைப் போட்டேனா னால், தானாக விழுந்ததா, கடன் பட்டவன் உடைத் தானா தெரியவேண்டாமா? காலை முறித்துப் போட்டால் வண்டியிலாவது தூக்கிப் போடுவையா ? இல்லை ஒடிப் போனாலும் வீட்டுக்கு வந்தேனும் சேதி சொல்லுவை யோன்னோ ?” கண்ணைச் சிமிட்டுகிறார். இல்லை என்மேல் அடி விழுந்ததும் கம்பியை நீட்டிவிடுவாயா ? நீ இப்பவும் எங்கிருந்து வந்தாய் எனக்குத் தெரியாது. வந்த இடத்துக்கே திரும்பிப் போய் விடுவாயோ ? நீ ஆதிமூலப் பொருளில் சேர்ந்தவன். கடமையைச் செய்கையில், உயிர் போனாலும் கை கால் பின்னமானாலும் ஏதேனும் Compensation ool-35E (9Guo!”

மானேஜரின் நகைச்சுவை சில சமயங்களில் இப்படித் தான். விபரீதமாக, இனம் தெரியா பயத்தை விளை விக்கும். ஒரு சமயம் ஸாரைத் தொடறதுக்குத் தைரிய முள்ள ஆளும் இருக்கானா என்று தோன்றும். கூடவே, இந்த மனுஷ்னோடு போய் பழிக்கு ஆகனுமா, ஏதேனும் சாக்குச் சொல்லிப் பின் வாங்கி விடலாமா என்றும்... ஆனால் அதெல்லாம் ஒரு செக்கண்டுதான். இப்படி யெல்லாம் சொல்லித்தானே, சார் சோதிச்சுப்பார்க்கிறார்!

“என்ன முழிக்கறே ? நான் சொன்னதெல்லாம் நேரக்கூடாதா ? நேரக் கூடாததா ? எனக்கு வயசா கல்லியா? இல்லை நான் சொல்வதெல்லாம் நேர்வதற்கு வயசாகனுமா ?”

சரியான சிமிட்டி ரோடு. டாக்ளி வெண்ணெய் மேல் வழுக்கிக் கொண்டு போகிறது. ரோடு வளைகையில் எட்ட தூரத்தில் ஒரு குன்று கம்பீரமாய், மெல்லத் திரும்பு கிறது. மூன்று மணியின் சாய்ந்த வெய்யிலில் குன்றின் மேல் ஒரு கறுப்பு மேகத் திட்டுக்குத் தங்க விளிம்பு கட்டி யிருக்கிறது. ஆங்காங்கே களத்து மேட்டில் பொற்கதிர் களைப் போர் அடிக்கிறார்கள். தலைக்கு மேல் உயரத்