பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

தூக்கிய முறத்திலிருந்து நெல் ஒரே சீராய்ப் புறு புறு வென்று உதிர்ந்து முறத்துக்கும் தரைக்குமிடையே பிற் பகலில் வெய்யில் மயக்கில் ஒரு தங்கச் சீலை திரை மின் னிப்படபடக்கையில் நெஞ்சில் என்னவோ செய்கிறது.

அன்று கூந்தலை அவள் வாரி முடிக்கையில் அகஸ்மாத்-பார்க்க நேர்ந்தது. லேசான செம்பட்டை. சீப்பு, உச்சந்தலையிலிருந்து உழுதுகொண்டே கீழிறங்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு பிரயாணம் கை அலுத்துப் போய் கூந்தலைச் சட்டென்று முறுக்கிக் கொண்டை முடிந்து, கூந்தல்

நுனியை

இழுத்து வெளி வாங்கிய போது அவசரமாய்த் தன்

. கூட்டில் புகுந்து கொண்டிருக்கும் ஒரு சிட்டுக் குருவி வால்

போல்

தோன்றிற்று.

- பற்களினிடையே கொண்டையூசி. கூந்தலை அள்ளிக்

கொண்டு உயரத்துக்கிய கைகள். அக்குளில் ரவிக்கையில் படர்ந்த வேர்வைத் திட்டு.

-அச்சமயம் நான் நேர்முகமாயிருப்பின் சிற்பத்தின் சீற்றத்தில் என்ன ஆகியிருப்பேனோ? :

நாதமுனி நாயக்கர் தொந்தியில் துணிசரிய ஓடிவந்து டாக்ஸி கதவைத் திறக்கிறார். காவியேறிய பற்களின் இளிப்பில் இரண்டு அகல ஜன்னல்கள்.

‘ஐயா வாங்க வாங்க” கைகூப்புகிறார், கட்டுக்குடுமி. மேல்துண்டு கூட இல்லை. மானேஜர் மெதுவாய் இறங்கு கிறார். ‘என்ன நாயக்கர் வாள், செளக்யம் எப்படி?”

‘ஐயா உருவத்தில் ஆண்டவன் கொடுத்திட்டிருக் கும் போது இந்தக் கட்டைக்குக் குறை ஏதுங்க?