பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 15%

கிணத்து ஆழத்துலேருந்து ஒரு ஆள் என்னை அண் னாந்து நிக்கற கோடு மின்னல் மினுக்குது. முகம் கம்மா நகநகன்னு - .ெ த ைன ச் சா இப் பக் கண் கூசுது. கண்ணைப் பொத்திக்கிட்டேன். ஆனால் கண்ணுக்குள் ஆளு. தோளிலே கலப்பை, தலையில் முண்டாசு.

  • அடே சோம்பேறி, மீசையை சரைச்சுக் கொட்டுடா. இனம் தெரியாமல் தோண்டினால் உன் மாதிரி தோத் துட்டு நிக்க வேண்டியதுதான். ஆகப் பொறுத்தவனுக்கு ஆக்கப் பொறுக்கல்லே.”

நான் குப்புற விளுந்து, ‘ஆண்டவனே எனக்குத் தெரிஞ்ச பூசையெல்லாம் போயாச்சு. முடிஞ்ச பலியெல் லாம் கொடுத்தாச்சு.-”

‘சீ'- கண்ணுக்குள்ளே, அந்த ஆள் உடம்பு பூரா கோ வ த் து லே குங்குமா செழுப்பாயிடுச்சு. தான் பிராம்மணன். பலியைப்பத்தி என்கிட்டப் பேசாதே. பள்ளத்தை விட்டுட்டு மேட்டுலே தோண்டிப் புதுசா கொட்டப் போறியோ? மடையா, அ .ெ த ன் ன டா மூளை?”ன்னு சொல்லிக்கிட்டே, தோளிலிருந்து கலப் பையைக் கையில் வாங்கி பக்கவாட்டில் வீசி எறிஞ்சான். ஏர் முள் பொத்துகிட்ட இடத்துலேருந்து, ஆண்டவனே.

பீச்சி அடிக்குது.

எனக்கு உடல் பூரா ரோமம் குத்திட்டது. குளிரினால் அல்ல. நெற்றி கசகசத்தது.

“ஆண்டவனே!” கண் ைண க் ககக்கிக்கிட்டேன்! கண்ணுக்குள்ளே இதென்ன கண்கட்டா? இல்லை மெய் தானா? மெய்தான். கண்ணுக்கு வெளியே கிணத்துலே தண்ணி. மளமளன்னு ஏறிக்கிட்டு வருது. இடுப்பிலே கை வெச்சிக்கிட்டு அந்த ஐயா சிரிச்சிக்கிட்டே நிக்கிறார் சிரிப்பிலே அப்படி ஒரு ஒளி வீசுதுங்க ஐயா! தண்ணி ஏறி அவரை மூடுது. எனக்குக் கை கொடுக்கத் தோணல்லே ‘தண்ணி தண்ணி !!. தொண்டைக்குள்ளே தா ன்