பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா.

குமுறுது. நாக்கு இளுத்துட்டுது. ஆளின் முண்டாசுத்துணி மட்டும் கழண்டு மேலே மிதந்துவருது. எட்டிப் பிடிச்சுக் களுத்துலே சுத்திக்கிட்டேன்.

கிணறு பொங்கி வயல்லே வளிஞ்சு ஓடுது.ரெண்டு கையி லும் அள்ளிக்குடிக்கிறேன். தண் ணியா அது? அமிழ்தம் ! அமிழ்தம் !! தண்ணிலே முங்கறேன். விளுந்து புரள்றேன் உடல் பூரா புது ரத்தம் பாயுது. பழைய கவலை,தரித்திரம் எல்லாம் களுவி ஓடுது. அங்காளம்மா! அங்காளம்மா !! ஆத்தா வவுத்துலே பாலைவாத்துட்டா. முழுமுலையே எனக்குக் கொடுத்துட்டா!என்னவோ பினாத்திட்டு ஊருக் குள்ளே ஒடியாதேன். -

என்னப்பா நாதமுனி?”

‘ஆத்தா பாலு: ஆத்தா பாலு!’ வெறியாட்டம். என்னை நாலு பேர்கட்டிப் பிடிக்கறாங்க. அவங்களாலே மாளல்லே.” *

நாயக்கர் கொஞ்ச்ம் மூச்சு வாங்கிக் கொண்டார். எனக்கும் அப்பிடித்தான் இருந்தது. தென்னைமரத்தில் குரங்கு க்ரீச்சிட்டது.

“அந்த தலைப்பாத்துணி, ஆட்டுலே, பானைலே பூவாடையில் வெச்சிருக்குது.” இருள் மூட்டத்தில் அவர் முகம் திரையிட்டு விட்டது. அங்கிருந்து குரல்.

-'அப்புறம் புதுக் கிணறு ஏன் தோண்டணும்? இதுக்கே இன்னும்_கட்டடம் கட்டியாவணும், தொட்டி கட்டணும், பம்பு செட், கொட்டா, உள்ள எந்த ஆழத் துக்குக் குழாயிறக்கணும்! கூலி கொடுத்தது, சரக்கு வாங்கினது எல்லாம் கையெழுத்து, கைநாட்டு, ரசீது, புதுகிணறு தோண்டினாப்போல காட்டிட்டேன். பெரிய ஐயா இடையிலே வந்து நோட்டம் பார்த்திருத் தால் மாட்டிக்கிட்டு இருப்பேன். நல்ல காலம் ஐயாவோ, பாங்க் இனிஸ்பட்டரோ ஆறு மாஸ்த்துக்கு இந்தப்