பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 16

பக்கம் எட்டிப் பார்க்கல்லே ஐயாவுக்கு, உடம்பு சரி யில்லே. ஆபிஸி லவேறே ஜோலி, அப்புறம் ப்ளஷரைப்

போட்டுகிட்டு ஒரு நாள் வீட்டு வாசல்லே நிக்கிறார்.

வவுத்துலே புளியைக் கரைக்குது. ஆனா என்னாச்சானும் மாட்டிக்க வேண்டியதுதானே? ஆனா நாமட்டும் என்ன

கடனை வாங்கி என் பெண்டாட்டிக்கு காசுமாலை

கட்டிட்டேனா?

கழனிக்கட்டுக்குப் போனோம். ஐயா சுத்து முத்தும் பாக்கறார்.

“என்ன நாயக்கரே? கிண்று எங்கே? வடையைக் காக்கா தாக்கிண்டு போயிட்டுதா?”பேசாமே ஐயாகாலுலே நெடுஞ்சாங்கடியா விளுந்துட்டேன். விசயம் பூரா கக்கிட் டேன். கதை முடிஞ்சதும் ஐயா என்னை ஒரு பார்வை பார்த்தாரு பாருங்க. அதை நான் சாவற நேரம் வரைக்கும் மறக்க மாட்டேன், மறக்க முடியாது.

“முன்னாலேயே ஏன் சொல்லல்லே? உன் புளுகு மந்தரத்துலே என்னையும் மாட்டி விட்டையே! நடந்தது ஒண்ணு, பாங்குலே ரிகார்டு ஒன் னு காட் டு தே , என்னையும் உடந்தையாக்கிட்டே. உன்னை நம்பிமோசம் போனேன்னு நின்ன இடத்துலே நிக்காமே துள்ளறாரு.

‘காலை விடய்யா காலைவிடய்யா!!” நான் ஏன் விடறேன்? விடமாட்டேன். நல்லதோ பொல்லாதோ ஐயாதான் கதி,

ராவோடு ராவா வீட்டுக்கு வரவழைச்சாரு. புதுசா புதுசா காலி பாரத்துலே ஏதேதோ அங்கே இங்கேன்னு காட்டி கையெளுத்து வாங்கிட்டாரு. மன்னன் என்ன செய்தாரோ தெரியாது. புதுக் கிணறு தோண்ட வாங்கின கடனை பழங்கிணறை ஆழப்படுத்த சீர்படுத்த கட்டடம் கட்டவாங்கின கடனாய் மாத்தி-பெருமூச்சு ஐயாதான் வி ட் - ரு. எ னக் கென் ன கவலை? என்னையேதான் ஐயா கிட்ட ஒப்படைச்சுட்டேனே!

க-11.