பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா, ச. ரr

“நாயக்கரே நீர் கஜப் போக்கிரி!”

‘தாயக்கரே துரோகம் பண்ணிட்டீங்க” ஐயா. சொன்னது என்னவோ ஒரு முறைதான். ஆனால் அந்த எண்ணம், மனவருத்தம் அவர் நெஞ்சை விட்டு இன்னும் நீங்கல்லே. எனக்குத் தெரியும். அப்புறம் நான் எட்டு போகம் எடுத்தாச்சு. ஆண்டவன் புண்ணியத்துலே நாளைக்கே ஒரு மட்டா இந்தக் கணக்கை அடைச் சுடலாம். ஐயாவுக்குத் தெரியும். அடைச்சுட்டேன்னா ஐயா அன்னிலேருந்து இந்தப் பக்கம் காலை உதறிடுவார். ஆனால் நான் மாட்டேன். ஐயா பாதம் என் மண் ணுலே பட்டுகிட்டேயிருக்கணும். அதுதான் என் ஆஸ்தை. ஐயா கடன் கொடுத்த ராசிலே தானே எங்கள் பரம்பரை கஸ்டம் விடிஞ்சுது?”

துரியோதனனுக்குத் தொடைவரை

கர்ணனுக்குக் குண்டலத்தில்

தருமனுக்கு சத்யத்தில்

மானேஜர் ஸார், உங்களுக்குப் பாதத்திலா ?

நாயக்கர் குரலில் கண்ணிர் துளும்பிற்று.

“சின்ன ஐயா கிட்டே சொல்லுதேன். நடந்தது நடந்து போச்சு. என்ன செய்ய ? விவசாயிகிட்ட, வியா பாரிகிட்ட என்ன நாணயத்தை எதிர் பார்க்கிறார் ? அதுவும் எனக்கு எத்தனி சோதனை நடுவுலே? வியாபாரிக் கும் பேராசை, ஏமாத்தத்துரண்டுது. வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கத் தோணுதா ? எண்ணம் இருந்தால், அதுமட்டுக்கும் தான் எங்கள் நாணயம் - கடன் வாங் கறப்போ ஒரு நியாயம்; கூழைக்கும்பிடு. எசமான்பாட்டு, கடன் வாங்கினப்பறம் இன்னொரு நியாயம். எனக்கே தெரியுது. ஆனால் என்ன செய்ய ?”

நாயக்கர் கையை விரிக்கிறார்.

‘நாடு முளுக்க ஒரு அரிச்சந்திரன் கதைதான் உண்டு. அதனால் சொல்லிக் காட்டவும், கதைசொன்னால்