பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

உமக்குக் கிணறு தோண்டிக் கொடுத்த பிராம்மணன் உங்கள் குடும்பத்துக்குப் பிள்ளையாக வந்துட்டதா நெனச்சுக்குமேன் :

நாதியத்தவனுக்கு ஜாதியென்ன ? நீங்கள் இஷ்டப் பட்டால் அம்பி நாயக்கன் ஆயிடறேன்.

 3

ஆனால், இப்படி நினைத்ததாலேயே என்னைக் கை தூக்கிவிட்ட மானேஜர் லார் என் தெய்வத்துக்குத் துரோகம் இழைத்து விட்டேனோ? தெரியல்லியே! யாரை மன்னிப்புக் கேட்பேன், ஸாரையா? தெய்வத்தையா?

{} {Q} {}

ஒருநாள், தெருவில் நானும் P.C. 433-ம் ஒருவரை யொருவர் கடந்து செல்கிறோம். பேசிக் கொள்ள வில்லை. மனிதன் கண்களில் என்னைக் கண்டு கொண்ட அடையாளமே இல்லை. P.,ே 433, உன்னை நான் என்ன செய்தேன்? செய்ததெல்லாம் நீதான். சிரிப்பு வருகிறது. ஒரு பக்கம் வியப்பாகவும் இருக்கிறது. அடித்த கை சுளுக்கிக் கொண்டது எ ன் று அழுவோர்க்கும் அவர்கள் நியாயம் செல்லத்தான் செய்கிறது.

C. }

அப்புறமும் ஒரிரு முறை. அப்பவும் அப்படியேதான்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் முத்தையா, ‘மருமவப் பிள்ளை தனியாப் போனப்புறம் கோமு என் வீட்டுக்கு வர தில்லை. அவள் தான் விரோதம் பாராட்டறாளோ அவன்தான் வரவிடல்லியோ ? யார் கண்டது ? வந்தால் சந்தோசம். வீட்டிலே மட்டனோ, கஞ்சியோ, ஒரு தான் சேர்ந்து சாப்பிடலாம். வாராட்டி யான் என் செய்ய ? நான் போய் வேப்பிலை அடிக்க மாட்டேன். எனக்கு இறங்கவும் இறங்காது”