பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j வா. ச. ரா.

பிடிப்புக்கும் குறைச்சல் இல்லை, மானேஜர் உள்படத் தான்.

(இப்போது நான் மட்டும் மற்றவன் சம்பளம் பார்க்கல்லியா? ஆனால் போடுபவனே நான் தானே, அதற்கு அதிகார பூர்வமில்லை. அவ்வளவுதான்!)

வாரமானவுடன் மறுபடியும் கடன் வட்டம். இப்படியே சக்கரம்.

‘அம்பி, பிழைக்கத் தெரியாதவன், வட்டிக்கு விட்டால், இந்த ரெண்டு வருடத்திலே ஒட்டிக்கு ரெட்டி பண்ணியிருக்கலாம். பாங்கு வட்டியை ஒரு வட்டியாச் சொல்லு, வெட்கக் கேடு!”

‘என் வழிக்கு வராதீங்க அப்பா, நான் கண்டிப்பா சொல்லிட்டேன், joint aic தெரியுமில்ல? ப ா ள் பு க் காசோலைப் புத்தகம் அவரிடம் இருக்கு.’

‘கில்லேடி நீ கொடுத்தே, இருக்கு”

‘விடு அப்பா அவனை, மானேஜருக்கு அவன் ஜவாப்

சொல்லனும், சேர்த்து வெச்சுக்கட்டும். கலியாணம்

இது

கார்த்தி அவன் செய்துக்க வேண்டாமா? கண்ணைச்

து சிமிட்டுகிறான்கள்.

‘பெண் பார்த்தாச்சா?”

‘பெண் பார்க்கனுமா என்ன? வீட்டோட மாப் பின்ளை-”

‘அம்பி!” நல்ல வேளை மானேஜர் கூப்பிட்டாரோ பிழைத்தது. நடுஹாலில் அடிதடி ஆகியிருக்குமோ என்னவோ?

ஆனால் முத்தையா தமாஷ் பண்ணுகிறானா? இல்லை கொஞ்ச நாளாவே முத்தையா தமாஷா இல்லை.

முத்தையா இல்லை. ஒரு தாவுக்கு மூனுபடி தாண்டு ஜிவ்’ எங்கே போயிற்று? விழியோரம், வாய்க்கடுப்பில் சுருக்