பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##2 @fr. fr.

அன்றிரவை இப்போ நினைச்சாக் கூட இப்ப மாதிரி யிருக்கு. வேண்டாம் ! வேண்டாம் ” கண்ணை மூடிக் கொண்டு இருகைகளாலும் காற்றில் எதையோ பிடித்துத் தள்ளினார். மரகதத்துக்குப் பைத்யம் பிடிக்கல்லே. இல்லை, பிடிசசுடுத்தா ? குத்து விளக்கு ராப் பூரா எரியறது. விளக்குக்கு நமஸ்காரம் பண்றா, பாலா போட்டோவை மாரில் அணைச்சுக்கறா. என்னிடம் வருகிறாள். நீங்கள் தைரியமாயிருங்கோ என்னண்ணா பண்ணுவோம் ?” கேட்டுக் கொண்டே உதட்டைப் பிதுக்கிக் கொண்டே உடைகிறாள்.

‘இப்போ அவன்- அவன் எவனோ ?- அவன் என்னைக் கேட்டால், பெண், பெண்டாட்டி ரெண்டு பேரில் யாரை உனக்குக் காப்பாற்றிக் கொடுக்கணும் என்று கேட்டால், இப்போ பதில் சொல்ல எனக்குத் தெரியும். பிரயோசனம் ?” உதட்டைப்பிதுக்குகிறார்.

மேலிருந்து முனகல்கள் எட்டுகின்றன. மானேஜர் ஒரு பக்கமாகத் தலை சாய்த்து உன்னிப்பாய்க் கேட்கிறார். முனகல்கள் படிப்படியாக அடங்குகின்றன. மானேஜர் ஏதோ புரிந்து கொண்டு தலையை ஆட்டுகிறார். அப்புறம் சந்தடி எதும் கானோம். பெருமூச்செறிகிறார்.

‘விடிஞ்சு து ஒரு வழியா. போலிஸ் நாய் வந்தது. ஒடித்தோ ஒடித்தோ ஒடித்து, வீடுதாண்டி மூணுமைல் இருக்கும். ஜன சந்தடிதாண்டி ஒதுக்கான ஒரு ரோடில், ஒரு ப ா ல த் த டி யி ல் தண்ணி யோரமா, கரையில், ஸ்மரனையில்லாமல்-”

மேலே ஒடவில்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது. முகத்தைப் பொத்திக் கொண்டார்.

தேம்பினார். ‘பாவாடையெல்லாம் ரத்தக்கறை (இன்று அற்புதமான காலை. சூரியனே ஆகாச

கங்கையில் கு எளி த் து ... சூரியனே அன்றும் நீதானே சாகதி!)