பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இா, ச. ரா

கச்சம் கண்டது. நான் தலை நிமிர்ந்தபோது, அவளுக்கு, உதட்டோரம் குழிந்ததோ?

மிச்சத்தைக் கொட்டி விட்டு, மறுபடியும் நிரப்பிக் கொண்டு, இடுப்பில் வைத்துக் கொண்டு, கிணறை. ஒட்டிய வீட்டுள் சென்று விட்டாள். -

அது சற்றுச் சின்ன வீடுதான். ஒட்டு வீடு, திண்ணையில் உட்கார்த்தேன். என்னதான் வயிறு. புடைக்கக் குடித்தாலும் ஜலம் மட்டும் எவ்வளவு, தாங்கும்? ஒடி ஒடி பகல் பூரா பட்டினி, காலி வயிறு எட்டு ஊருக்குக் கடபுடா- வெட்கமாயிருந்தது.

ஒடிப் போவது, ஒடிப் போனதைப் பற்றிப் பின்னால்

பேசுவதுபோல் இல்லை. கஷ்டமாத்தான் இருக்கும்போல இருக்கு. முதல் நாளே இப்படியிருந்தால், இன்னும்


ரண்டு நாள் இது போலானால், மூனாம் நாள் என் மல் புல்.

காமுப் பாட்டிக் கிட்டக்கூடப் பசின்னு கேட்ட நினைப்பு இல்லை.


  • சனியனே, உன் மாப்பிள்ளை முறுக்கை உன் மாம னார்கிட்டே வெச்சுக்கோ. தவிடு தின்றத்துலே ஒய்யாரம் வேறே, கோழி, குப்பையைக் கிளர்ற ஒய்யாரம், சீ, வந்து தின்னுட்டுப் போ!’

அடி சோறோ இடி சோறோ சுடுசோறா வத்தல் குழம்போ பழையதோ பச்சை மிளகாயோ பசிக்கு வயிறு எப்படியோ நிரம்பிவிடும். வயிறு வயிறு: ஐயோ வயிறே!

உள்ளே பேச்சுக்குரல் கேட்கிறது. ‘இப்படி வழியில் போற நாய் காக்காய்க்கெல்லாம். நீ கரைஞ்சுண்டிருந்தேன்னா, நாளடைவில் ந - ம்

கற்பூரமா நமக்கே காணாமல் போயிடுவோம்”.