பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 39

“நாய் காக்கா இல்லேம்மா, பையன்.” “சரியாப் போச்சு. அயன் விசேஷம் தான் போ. வாசல்லே ஏதாவது உலர்த்திட்டு மறந்துட்டயா பாரு... சுருட்டிண்டு போயிடப் போறான்.”

“உஷ்- பேச்சு எட்டப் போய் அடங்கியும் போயிற்று.

என் தொண்டையில் ஏதோ சிரிப்பு மூட்டுவது உணர்ந்தேன். அழுகையே தேவலை. நாதியற்றுப் போனால் ஓயாதபாடம் தான். ஒடிப்போனவன் அப் பப்போ அங்கங்கு கேட்டுக் கொள்ள வேண்டிய பாடத் துக்கு இப்படித்தானே பழக்கிக் கொள்ள வேண்டும். வேறு வழி?

மாலை கருகி இரவாகிவிட்டது, ஊரோசை அடங்கி விட்டது. இங்கு எல்லோரும் சமணர் போலும்:

“யாரது?’’ ‘அதட்டல் கேட்டு, களைப்பின் அரைமயக்கத்தி னின்று திடுக்கென விழித்து எழுந்து உட்கார்ந்தேன்.

ஒருகையில் சிக்குத் துணி போட்டு மூடிய ஏனம். தோள்பட்டையில் தொங்கும் பெரிய கோயில் சாவி. பட்டை நாமம் குடுமியுடன், வயதான உருவம், மறுகை லாந்தரை என் முகத்துக்கெதிர் பிடித்து

“யாரப்பாசின்னப்பையன் இந்த வேளை?”

என் முகத்தைப் பார்த்ததும் அதட்டல் சாந்தமாக

மாறிற்று. “பார்த்த முகமாயில்லேயே! என்னப்பா அழறே?” “நான் அழல்லே.” அவரைத்திருப்பி அதட்டி, மூக்கை உறிஞ்சினேன்.

‘சரி நீ அழல்லே, உள்ளே வா'