பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 23

அங்கெல்லாம் நானும் போனேன். அப்போ நானும் பையல் தானே! அன்றையப் போது அப்படிப் போச்சு. அது ஒரு வேடிக்கை. குரங்கு நியாயம் குப்புசாமிப் பிள்ளைப் பண்ணை- ஒரே இடமாய் அத்தனை வயலையும் எப்படித்தான் வளைச்சுப் போட்டானோ? இந்தப் பக்கம் ஆற்றங்கால், அந்தப் பக்கம் ஏரிப் பாய்ச்சல். இடையில், கண்ணுக் கெட்டிய வரையில் கண்ணுக்குக் குளுமையாக பயிர்ப் பச்சை காத்தோட்டத்தில் ஏதோ ரகசியம் பூத்துக் கிளுகிளுக்குது. அங்கங்கே ஏ க்தக் கால் வேறே. ஊரில் கறுப்பு ஒடினாலும் பிள்ளைவாள் காட்டில் என்னிக்கும் வெள்ளம்தான். அதுதான் குரங்கு நியாயம் போலும், இத்தனைக்கும் பிள்ளை குட்டியில்லை. செட்டித் தெருவில் வீடு. மூனடுக்கு மாடி . மூணாவது மாடிக்கு வேலையேயில்லை. காவியாக் கிடக்கு. ஆனால் காரணம், பக்கத்து வீட்டானை விட நம் கட்டடம் ஒரு முழமாட்டியும் ஒசந்திருக்கனும், நாட்டுப்புறத்தில், பிள்ளையென்ன, கொஞ்சம் பசை படைத்தவன், எல்லாருக்கும் இப்படி ஏதேனும் ஒரு வீம்பு, அதை நிலைநாட்ட ஒரு தஸ்தா வேஜுக் கட்டு அழகாப் பட்டுத் துணியில் சுற்றி கோர்ட்டுக்கு அலைச்சல், வாயிதா, வாயிதா காதில் விழவேனும், ஒற்றை மாட்டு வில் வண்டியில், நாலு மைல் ல்ொடக், லொடக் கோர்ட்டுக்கெதிரே கோகுல் பவனில் நாஷ்டா’, ‘ஐயரே, இன்னும் ஒரு வடை வை. வடையில் தொண்டிதான் இருக்குது. சாம்பாரை யாச்சும் தாராளமா ஊத்தேன். ஒ. முதலாளியே நீ தானா? அதான் இவ்வளவு கஞ்சனாயிருக்கே. விடு ஐயா, அத்தினியும் கஷ்டமர்கிட்ட வசூல், உன் கையை விட்டு என்னத் தட்டுக் கெட்டுப் போவுது? ஊத்து ஐயா! சாம்பாரா இது? வெங்காயம் தானையே காணோம். பருப்பையே காணோம். இலை இலையா என்னவேர், புளித் தண்ணியிலே, உசிரைப் புடிச்சுக்கிட்டு நீஞ்சுது. இதுக்கு சாம்பார்ன்னு பேரு வேறே! மதுரை, நீயும்