பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ல்ir. ச. ரா.

ஒரு வடை வெச்சுக்க. சாம்பார் வடை நல்லா யிருக்குதப்பா. இத்தினியும் பின்னால் பிரதிவாதி கிட்டே வசூல் தானே, என்னத்தியோ கணக்குச் சொல்லி. எப்படியானால் நமக்கென்ன, பின்னே சாrதிக்குக் கூப்பிட்டா லேசா? அதனால்தானே நம்ம புளைப்பையே கெடுக்கற மாதிரி சாrக்காரன் காலில் விழறதைவிட, சண்டைக்காரன் காலிலேயே விளுன்னு பளமொளியே வந்திடுச்சு, ஆனால் நம்ம மக்கள் இருக்க மாட்டாங்க வெச்சுக்க. சட்டமே சாட்சி வாக்குமூலத்தைத் தானே நம்பியிருக்குது. இவன் அவனைக் கொலை செய்யறதை நீ பாத்தியா? இல்வியா? கேசு தள்ளுபடி. மதுரை. வவுத்துக்கு வஞ்சனை செய்யாதே, நல்லா சாப்பிடு.” இத்தனைக்கும் முழங்காலுக்குமேல்தான் கட்டை வேட்டி சொக்காய் கிடையாது. சுவுக்கம்தான் கஷ்குமுன்கு உடம்பு, விண்ணுனு தேங்காய் உடையற மாதிரி கெட்டித் தொந்திமேல் எட்டிப் பார்க்கும் மார்மேல் கைகட்டி, மெய். சாக பொய் சாகரி, சாகரிக்காரனுக்கு சாr; நியாயத்துக்கும் நிஜத்துக்குமா கோர்ட்? சட்டத்தின் அட்டம் ஒழுங்காய்ச் செலுத்தியாறதா அதுக்குத்தானே கோர்ட். சாrயின் தோள்மேல் தான் கோர்ட் சாஞ்சு . திக்கறது. மெய் போலும்மே மெய்போலும்மே. பாம்பைப் பழுதையாக்கு வெள்ளைக் காக்கை கண்டிப்பாய்ப் பார்த்தேனுங்க நான் மாத்திரம் இல்லேங்க சாகவி குப்புசாமிப் புள்ளேங்க யாரு? குப்புசாமியா? ஐயையோ குரங்கு நியாயம். முன்னாலேயே ஏன்ய்யா சொன்னாமே. போனே. அந்தத் தரப்பிலே அந்த ஆள்னா அப்பீலே யில்லே. உன் கப்பலை அடகு வெச்சு நீ அப்பீல் பண்ணினாலும் நீதான் கவிழ்ந்து போவே. என்னா சார்விக, என்ன சட்ட அறிவு, என்னா கோட்பாடு களஞ்சியம் அத்தினியும் விரல் நுனியில் அத்துப்படி, வக்கீலும் ஜட்ஜும் அவன் வாக்குமூலத்தை வாயைப் பிளந்து கேட்டுகிட்டு இருப்போம். எங்கள் அத்தனை பேரையும் அவன் முழங்காலில் போட்டு கண்ணுக்கு