பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 37

அது என்ன ? நேர்வது நேரட்டும்.

{ {}

கையெழுத்து மறைந்து கொண்டிருக்கும் அந்த அந்தியிருளிலும், மரத்தடியில் நின்றவன் கையில் அரிவாளின் நெய்க்கூர் பளப்பளத்தது.

‘தம்பி, மரியாதையா இறங்கிடு. இறங்கிட்டா ஒண்னும் செய்ய மாட்டேன்.” இயற்கையிலேயே சற்று கரகரத்த குரல் ஏதானும் கட்கட் பண்ணே, காலை முறிச்சுடதல்லாமல் போலீஸ் வரைக்கும் போயிடும் சொல்லிட்டேன். என் மருமவப் பிள்ளைதான் ஏட்டு. அவன் கிட்டப் போயிட்டால், அப்புறம் உன் ஆத்தாகூட உன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. உன்னைக் கீரை கடைஞ்சுடுவான். ஆமா, சொல் விட்டேன்.”

தலைக்குச் சற்று எட்ட இளநீர்க் குலையின்

பசுமையே ஒரு முழுச்சிரிப்பாய். கிளர்ந்தது, அந்த உயரத்தில் தென்னை மட்டைகள் மேலேயே நடந்து சென்று, தோப்பையே கடந்து தப்பித்துக் கொள்ள லாமா? -

இரு மட்டைகளுக்கிடையே தெரிந்த இடைவெளியில் கற்கண்டுக் கட்டி போல் ஒரு நகத்ரம், அப்பொத்தான் உதித்துக் கேலியில் சிரித்தது.

உன் நினைப்பு நடவாத காரியம். உனக்கே தெரியும். உன் கனத்தில் மட்டை முறிந்ததும் உன்னை லட்டாட்டம் ஏந்திக் கொள் வான்.

“என்ன, மனசைத் திடம் பண்ணிக்கிட்டையா? ராமுழுதும் உனக்கு நான் காவலா? உம் இறங்கு.”

ஒரு இளநியைப் பறிச்சு இவன் தலையிலேயே போட்டால்...?