பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 gaf g Jfr

கீழிருந்து டக்கென்று டார்ச் என்மேல் அடித்தது, என் மனதில் ஒடும் எண்ண நரம்புகளையே அவனுக்குக் காட்டிக் கொடுப்பதுபோல்,

இறங்கத் தலைப்பட்டேன். எங்கேயோ ரயில் ஊதிற்று.

இறங்க இறங்க ஆங்காங்கே இளநீர் முடிச்சுக்கள். சீச்சி புளிக்கும். சுpல்: தணல் கட்டியைச் சாமனையால் தூக்கி வைத்தாற் ப்ோல்

-புறங்கையில் ஏதோ?- வலதா இடதா? விழுந்த இடத்தில் தணல் அப்படியே ஒட்டிக் கொண்டது.

“:rrL : ** “என்ன? என்ன??” கீழிருந்து எதிர் அலறல். ஆயிரம் கொடுக்கரிகள் கையுள் மாறி மாறி வீசிக் கொண்டே மேலேறின. -

ஆண்டவனே! என் மானம் இதுதான் உன் முடிவா? ஆனால் வாய் என்ன அலறியதோ? மரத்தில் கைப் பிடி தானே விட்டது. அதள பாதாளத்தில் விழுந்து கொண்டேயிருந்தேன். அதுதான் கடைசி...

{}  இப்போப் புரிகிறது. எண்ணம் ஆயிரம் எண்ணலாம். என்னென்னவோ, விதவிதமாய், கம் பீ ர ம | ய், கவிதையாய், ஆபாஸ்மாய், கொடுமையாய், கருணை யாய், புண்ணியமாய், பாடமாய், சம்பிரதாயமாய், புரட்சியாய்- என்ன வேனுமானாலும் எண்ணிக்கோ எண்ண லெவலில் அடுக்கடுக்காய், அதன் தேன்கூடுக் கட்டடத்தில் அறைக்கு அறை எதுவுமே பாந்தமாயிருக் கிறது.