பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? Grr. rfr

கலைஞனின் உண்மையான தவநிலையை நீ எவ்வளவு அற்புதமாகச் சொல்கிறாய்! இத்தனைக்கு உனக்குத் தம்’. இல்லை. கழுத்து நரம்பு புடைக்கவில்லை. உன்னோடு படுக்கும் புருஷனிலிருந்து இரவு உன் எச்சிற் சோற்றைத் தின்று விட்டு, நன்றியில் வாலைக்குழைக்கும் நாய் வரைவழிப் போக்கன் நான் உள்பட- எல்லோரும் உன் வழியின் குறுக்கே போய், உன்னையே ஒரு கிறுக்கலாக்கிக் கோண்டிருப்பவர்தான். ஆனால் நாங்கள் என்ன செய்ய, அதுவே எங்கள் வழியாயிருக்கிறதே! ஒருவர் காலை ஒருவர் இடறிக் கொண்டு தான் நடக்கவே வருகிறது. நீ. கூறும் உண்மைக்கு ரோசப்பட்டு என்ன செய்வது ? நான் என்ன செய்வேன் ?

ராமா, என்ன செய்வேன் ? காமு, என்ன செய்வேன் : கோமு, என்ன செய்வேன் ? அம்மா, என்ன செய்வேன் ?

அவள் போன பின், கல்லாலடித்தாற்போல், கட்டிலில் எந்நேரம் உட்கார்ந்திருந்தேனோ ? எ ன் ன த ன் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதுவும் தெரியாது. கோமு பொதுவில் தான், நீ உறவைச் சொன்னாளா அல்லது அம்பியையே மறுத்தாளா ? தெரியாது.

வயலோரம், ஊர் எல்லையில் ஆங்காங்கே விளக்குகள் ஏற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டன. உச்சந்தலைக்கு நேரே நிலவின் தேசல் நிற்கிறது. நேரம் ஆக ஆக, இருளின் ஊட்டத்தில் நல்ல வெளிச்சம் ஏறிவிடும். நிழலி லேயே பிழைக்கத் தெரிந்த கிரஹம்.

கனைப்புக் கேட்டுத் திரும்பினேன்.

அந்தி மங்கலில் உயரமாக ஒரு உருவக் கோடு முறுக் கிய மீசையின் நுனிமுள், சிவப்புத் தலைப்பா உள்பட

5*

‘ஆ மாப்பிள்ளை வாங்க வாங்க. அமருங்க-” கட்டி

வில் இட்ம்கொடுக்க நகர்ந்தேன்.