பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 லா, ச. ரா.

போகப் போகத் தெரியும் அதுலே ஒரு வீடு: குடும்பத்தோடே காசிக்குப் போற ஏற்பாடுலே, ஒரு பெட்டியிலே அவங்களுடைய விலை மதிப்பான பண்டம், பாத்திரம், பொருளை வெச்சுப் பூட்டி, எதிர்வீட்டுலே பெட்டியை ஒப்படைச்சுட்டுப் போயிட்டாங்க.

போனவங்க திரும்பிவர மூணுமாளம் ஆச்சு. திரும்பி வந்தவங்க பெட்டியைத் வாங்கிட்டு, திறந்து பார்த்தால், உள்ள வெச்சபாத்ரம்- கிழங்காட்டம் சாப்பிடற வெள்ளித்தட்டு, ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு, பறங்கிக் காயாட்டம் வெள்ளிகூஜா அரை டஜன் வெள்ளிதம்ளர்எல்லாம் அபேஸ். வீட்டுப் பெண் கலியாணத்துக்கு தேன் துளியாட்டாம் சேர் த் து ப் பண்ணிவெச்ச பிரியப் பண்டங்க.”

சற்று எட்ட வீழ்ந்துகிடந்த ஒரு தென்னை அடிமரத் துண்டின் மேலிருத்து ஒரு ஒணான் “ஆமாம் ஆமாம்’ என்று தலையை ஆட்டிற்று. இந்த நேரத்தில் இது ஏன் இன்னும் தன் வளையில் அடங்கவில்லை ? சாட்சி சொல்ல வந்ததா ? ஓணான் சாக ஏற்கப் படுமானால், நாட்டில் வீடுகளைக் கட்டுவதற்குப் பதிலாக, எல்லோருக் கும் சேர்த்து ஒரு ஜெயிலே கட்டிவிடலாம். போலீஸ் இலாகாவில் கனவேகமாக ஏறிக் கொண்டேயிருக்கும். குறைந்த பட்ச உ த் தி யோக மே ஏட்டில் தான் ஆரம்பிக்கும். P. C. இல்லாமல் H. C. அதெப்படி? அது என் கவலை அல்ல. அது டிமார்ட்மென்டல் அதுதான் கற்பனை. கற்பனை என்பது இதுதானா ?

“பெட்டிக் கடியில் நாலஞ்சு இன்சூரென்ஸ், ஒரு S.S.I.C சர்டிபிக்கேட்டு, எலெக்ட்ரிக் பில் பழையரசீதுக் கட்டு, ஒரு கத்தை ஜாதகக்கட்டு, வீட்டுப்பத்திரங்கள், அப்படியே வெச்ச படி இருக்குதுங்க. வெச்சவனுக்குத் தெரியாது, காயிதங்கள் தனக்கும் பிரயோசனம் இல்லேன்னு?” -- - - -