பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 77

உண்மையிலேயே நான் இ வ் வ ள வு பெரிய ஒ ண ா ைன ப் பார்த்ததில்லை. பச்சோந்தியாகவே இருக்கலாமோ? இரவு, செதிள்களின் நிழலன்றி வேறு தெரியவில்லை.

“பண்டத்துக்குச் சொந்தக்காரர் வாயிலும் வவுத்து லும் அடிச்சுக்கறாங்க யார்கிட்ட ஒப்படைச்சாங்களோ அவங்களும் பதை பதைக்கறாங்க உண்மையிலேயே பதை பகைக்கறாங்க. மானஸ்தர். அவங்கவீட்டுப் பிள்ளைக் குத்தான் எதிர்வீட்டுப் பெண்ணைச் சம்பந்தம் முடிச் சிருக்கு. பெண் வீட்டார், காசியிலிருந்து வந்ததும் கலியாணம் பண்றதா ஏற்பாடு. அதனாலே அவங்களுக்கு எப்படியும் சீராகச் சேரப் போறப் பொருளை முன் கூட்டி ஏன் எடுக்கப் போறாங்க? தவிர ஏற்கெனவே சொத்து உள்ள வங்க. இந்தப்பண்டம் வந்து அவங்களுக்கு ஒண்ணும் ஆவப்போவதில்லே. இது சுத்தியிருப்பவங்க யாரும் ஒப்புக்கிடற பேச்சு. ஆனால் பணக்காரன் கிட்டத்தான் ஊழல் ஜாஸ்தி. இவங்களும் நல்லவங்க, அவங்களும் நல்லவங்கன்னு ஒருததருக் கொருத்தர் சர் டிபி கேட் கொடுத்துக்கறாங்க. அப்போ யார் பொய்? யார் மெய் ?”

கேஸ், உண்மையிலே கொஞ்சம் சுவாரஸ்யம் தான்:

  • காசிக்குப் போனவங்க திரும்பிவரதுக்கு முதன்னாள் தான், இவங்க கதவைப்பூட்டிக்கிட்டு, குடும்பமா ஆறு மணியாட்டம் போயிருக்காங்க. Tent-பாக்தாத்திருடன்’ ஏதானும் நடந்திருந்தால் அன்னிக்கு அந்த வேளைக்குத் தான் நடந்திருக்கணும் தாழ்ப்பாள், ஜன்னல் கதவு; மேல் கூரை முழுக்கத்தளம்-அத்தினியும் in Fact மூணாம் மனுசனைச் சந்தேகிக்க வழியில்லே. விருந்தாளி யாரும் இடையில் வரல்லே, நோட்டம் பார்த்துட்டுப்போனான்னு சொல்ல. அப்போ அது என்னய்யா மாயம் மந்திரம் சூன்யவேலை ? இவங்க எலுமிச்சம் பழம் கோழி சோழி வெச்சுப்பாக்கறதெல்லாம் போலீஸ் ஒப்புமா? எங்க Method எல்லாமே வேறே-'