பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 @fr 9rr,

தெரிந்த, இடம் தெரிந்த, இத்தனை, இந்த வீச்சுக்கு இந்தச் சேதம் என்று அளவு, நோக்கம் தெளிந்த வேலைப் i arti-frast gji. Systematc, Scientific. GG GL1– gG மேல் என்னைப் பொத்திக் கொள்ள நான் முயலக்கூட இல்லை. கைகளைத் துக்க முடியவில்லை. எனக்கு உப யோகமில்லாவிட்டாலும் ஒருநாள் உன்னிடம் கத்துக் கனும் படிப்படியாகத் தலை, மார்பு, இடுப்பு, கணுக் - pf %t;

பெஞ்சில் இருப்புக் கொள்ளாமல், முழங்கால்களைத் தழுவிக்கொண்டு அப்படியும் அடக்கமுடியாமல் எழுந்து ஆர்ப்பரித்து, கொக்கரித்து, சினிமாவில் அனுபவிக் கிறோமே, இந்த டி ஷா டி ஷ- வெல்லாம் அத்தனையும் உண்மையாயிருந்தால், இப்போ என் போல் தான் ஆள் கூராகி விடுவான் என்று அன்று தான் தெரிந்தது. நகரக் கூட முடியாமல், என்கட்டை, கட்டையாக அவன் காலடி யில் விழுந்து விட்டபிறகு, கையை ஒரு முறை துளசி தட் டிக்கொண்டு காலால் கட்டையை ஒரு முறை உதைத்து விட்டுப் (கடைசி கட்டி மாம்பழம்! அடிக்குழம்பு யானை போல்!) போய்விட்டான். அந்த ரண வேதனையிலும் எனக்கு ரோசமாயிருந்தது. என்னை இப்படிக் கூழாக்கிய பின்னர், கையில் ஒட்டிக்கொள்ள அழுக்குக்கூட யிருந்ததா என்ன? -

என்னைத் தேள்கொட்டிய தென்னை மரத்தடியில் வீழ்ந்து கிடப்பதை உணர்ந்தேன். தென்னை மரம்தான் எனக்குப் போதிமரம் போலிருக்கிறது, என்னவோ பம் பரம் சுத்தறது, கற்பூரம் எரிகின்றது. ஜாலர் குலுங்கறது. ஆனால் திரும்பத் திரும்ப, போதியிலிருந்து தென்னை வர நடப்பதே தான் நடந்து கொண்டிருக்கிறது.

தென்னங் கீற்றுகளிடையே ஒரு நகத்திரக் கொத்து என் மேல் சிதறுகிறது.

இனி உங்களுடன் நான் பேசலாமோ? உங்களோடு உறவாடலின் விளைவு தானே இது?