பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 85

இந்தப் புவனத்தின் சரித்திரமே நீயும் நானும் உறவின் தாக்கல் தானே! நான் நானில்லை நீ, நீயில்லை. அதனால் நீயுமில்லே நானுமில்லே ஆனால் நீயுமில்லாமல் நானும் இலாமல் உலகமே இல்லை.

என்ன புரிந்தது? என்ன புரியாமல் இல்லை ? வார்த்தைகள் சும்மா விடுவதில்லை. தம்மைத்தாமே புரிந்து கொள்ள முடியாமல் கண்ணாடியில் பிம்பம் போல் பிறவியில் தம்முகம் தெரிய தாமே கட்டிக் கொண்ட கோதாவுக்குள் ஒன்றையொன்று வெறியில் கட்டிப் புரள்கின்றன, கட்டித் தழுவுகின்றன. உரிமை உணர்வில் மனிதன் எத்தனை கீழ்த்தரமாக நடந்து கொள்கிறான்! காற்றின் அலைவில் கோமு, உன் முன்றானைக் கோடுக்குக் கூட என்மேல் தற்செயலாய்ப் பட்டதில்லை. நீயே புடவை உடுத்தின ஆண் பிள்ளை'ன்னு கேலி பண்ணியிருக்கிறேன். ‘புருசன்

பெண் சாதியில், யாரேனும் ஒருத்தர் ஆணாயிருக்கணு மில்லே"ன்னு பதிலடி அடிப்பாள். துணிச்சல்காரி

‘யாரது, அம்பீயா?” திரும்பினேன், முதல் அடியிலேயே தாடை கிழிந்தது தெரிந்தது.

அடுத்தடுத்து அடிகள் விழுந்துகொண்டேயிருந்தன. சர மாரியாக அ ல் ல தடலடியாக அல்ல. விஷயம்