பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

’பாஹேஸ்வரி, ஜன ரஞ்சனி. ஜோதிஸ்வரூபிணி’

த்விஜா வந்தி, ஹிந்தோலி வலந்தா, நாகஸ்வராளி, கம்பீர நாட்டை -

அம்பீ! எதுவுமே இலவசமில்லை. ராகம் ராகமாக உன் ஞானம் பெருக,

3,,

ஒவ்வொரு ஞானமும், அது கிடைத்த அந்தச் சந்தர்ப் பச் சூழ்நிலைப்படி, அதன்

சுங்கத்தை விடாமல் வாங்கி விடும். தெரிந்து கொண் டாயா, இப்போ தேனும் ?

இந்தத் தென்னை உயரமில்லை. அதனால் தான் அன்று இதைத் தேர்ந்தெடுத்தேன். அன்றிலிருந்து ஆரம் பித்த பாடம் தானே இன்னமும் ஓயவில்லை. கட்டை குட்டையாக, அடிமரம் பூதகியின் இடுப்பு என, என் முகத் தெதிரே இரண்டு ராக்ஷஸ் ஸ்தனங்கள் தொங்கின. சுவைத் தேன். வாயில் ரத்தம் உப்புக் கரித்தது.

வவியின் அடிப்பாரம் பரவிக் கொண்டே மேலே அழுத்திக்கவ்வுகையில், அந்த வலிகனம் கூட கிண்கிண் ஏதோ சுகம் தருகிறது.

மின் மினிப் பூச்சிக்கள் நாலைந்து எனக்கு விளக்குப் பிடித்தன. மின் மினியா, வலித் தெறிப்பா ? கட்டுக் கட்டாய்க் கேதார கொளம் சிறகு முளைத்த கட்டுவிரியனின் தங்க ரேக்குச் செதிள்கள் தகதக ஆரோகனத்தில் கண்ணெதிரே கம்பீரமாய் அழகான கவான் அடிக்கிறது

கோமு: ஐயோ கேதார கெளளம் வவிதாங்கல்லேடி: கோமு! உன் பாடங்கள் ஏதுமே இலவசமில்லையடி:

r.

அத்தனைக்கும் காணிக்கை ரத்தமடி:

என்கன்னம் ஒரு தையல் கேஸ்தான்.