பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

ரினும் நின் சொல் பெயரல்” என்று அவனுக்கு நல்லுரை நவின்றுள்ளார். இத்துடன் அவ னுக்கு அறிவுறுத்தல் இன்றி, “மன்னா! உன்னைக் காண இரவலர் வருவர். அவர்களின் குறிப்பு அறிந்து நீ ஈந்து அவர்களின் வறுமையைப் போக்குவாய் என்ற காரணமே அவர்கள் இடரான வழிகள் பல கடந்து வரு தற்குக் காரணம்” என்பதை

“நின் நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்

இன்மை தீர்த்தல் வன்மை யானே”

என்று கூறி அவனது கொடைச் சிறப்பைப் புகழ்ந்துள்ளார்.

இப்பாண்டியன் பகைவர் இடையில் கூற்றுவனைப் போல் இருந்து அவர்கள் உயிரைக் கொல்பவன் என்ற குறிப்பில் இவன் யானைமீது அமர்ந்த தோற்றத்தனாய்த் தன் கையில் வீரவாளுடன் துலங்குவான் என்பதை

“மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்

கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி”

என்று கூறி இவனது வீரச் சிறப்பையும் விளக்கியுள்ளார்.