பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 || 0

வழங்கத் தொடங்கினர். சிலர் காசுகளாகக் கொடுத்தனர்; சிலர் பூசணிக்காய்கள் வழங்கினர்; சிலர் கத்தரிக்காய்கள் கொடுத்தனர்; வேறு சிலர் வேறு சில காய்கறிகளும் வழங் கினர். அவர்கள் கொடுத்த காசு பாசி படிந்திருந்தது: அவர்கள் வறுமை கிலேமிகவும் இரங்கத்தக்க கிலேயில் இருந்தது.

இந்திய நாடு எழை நாடு. ஒரிசா ஏழ்மையின் கேக் திரம். அங்கு வாழும் மக்களே மனிதர்கள் என்று கூறு வதைவிட எலும்புக் கூடுகள் எண்ருே கடைப் பிணங்கள் என்றாே சொல்லலாம். ஒரிசாவின் எழ்மையைப் பற்றிக் காங்தியடிகள் கேள்விப்பட்டிருக்கிறார்; ஆனுல் பார்க்க தில்லை. இன்று அக் கொடுமையை நேரில் காணும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் பாழிடங்கள்! இடை இடையே இடிந்து விழுந்த குடிசைகள்! அக்குடிசை களில் பட்டினியாலும், நீர் வேட்கையாலும் ஆடவரும் பெண்டிரும் குழங்தைகளும் துடித்துக் கொண்டிருக்கும் கொடிய காட்சியைக் கண்டார். பெண்களின் உடலில் கந்தல் துணிகள் ஒட்டிக் கொண்டிருந்தன. இந்தக் கங்தல் களால் இடையை மட்டும் எப்படியோ மூடிக் கொண்டிருங் தார்கள். எஞ்சிய உடலை மறைக்க அவர்களுக்குத் துணி ஏது? காங்தியடிகளின் உள்ளம் கெக்குவிட்டு உருகியது.

கொடுமை! ஏழ்மை! ஆற்றாெளு ஏழ்மை உதவு வாரற்ற ஏழ்மை! என்னைப் போன்ற தனிப்பட்ட மனிதன் இவர்கள் ஏழ்மையை எவ்வாறு போக்க இயலும் என் வாழ்வின் இறுதிக் காலத்தில், கான் இங்கு வந்து சாகப் பெரிதும் விரும்புகிறேன். அப்போது இந்திய நாட்டின் பல பகுதியிலிருந்து என்னைக் காணப் பலர் வருவார்கள். அப் போது ஒரிசாவின் ஏழ்மை அவர்கள் கண்களில் படும்; அவர்கள் உள்ளத்தை உருக்கும். அவர்களில் ஒரு சிலரா வது இம் மக்களின் துயர் துடைக்கத் தம் அன்புக்கரங்களே