பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காந்தியடிகள் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டார் “கானும் ஒரு காலத்தில் ஆங்கிலச் செய்யுள்களைப் பெரிதும் விரும்பிப் படித்தேன். ஆனல் இப்போது படிப்பதை விட்டுவிட்டேன். இந்தியணுகிய நான் குறைந்தது எவ்வளவு சமஸ்கிருதம் தெரிந்துகொள்ள வேண்டுமோ, அந்த அளவு இன்னும் அறிந்துகொள்ளவில்லை எனக்கு ஏதாவது ஒய்வு கிடைத்தால் அவ்வோய்வு நேரத்தைக் குஜராத்தியில் புலமை பெறுவதற்கு ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? என்று கினைத்தேன். இந்திய காட்டின் சேவைக் காக என்னே உரிமையாக்கிக் கொண்டேன். அப்படி யிருக்கும்போது, இந்திய மொழிகளை கல்ல முறையில் பயின்று, தொண்டு செய்யும் தகுதியை இன்னும் உயர்த்திக் கொள்ளலாமல்லவா ? காட்டுத் தொண்டுக்காக நான் எதையாவது துறந்துவிட்டேன் என்றால், அது கான் ஆங்கில இலக்கியத்தின்பால் கொண்ட பேரார்வம்தான். பணமும் பதவியும் அதற்கு முன் ஒன்றுமில்லை; அவற்றை இழத்தல் துறவுமாகாது. நான் ஆ ங் கி ல இலக்கியத்தின்பால் எவ்வளவு பற்று வைத்திருந்தேன் என்று என்னுல் அளவிட்டுக் கூற முடியாது. எனினும் அதைத் துறக்க முடிவு செய்தேன்; துறந்தும்விட்டேன்’ என்று கூறினர்.

இதைக் கேட்ட காகா ஓமர்கயாம் பாடல்களே மூடி வைத்துவிட்டார். பிறகு அதை எப்போதும் திறந்து படிக்கவேயில்லை. அன்றிலிருந்து குஜராத்தி மொழியை கல்ல முறையில் பயிலத் தொடங்கினர்.

14. கல்வி

காந்தியடிகளின் வாழ்க்கை சத்தியத்திற்கு ஒரு சோதனைக் களமாக அமைந்தது என்று முன்பே குறிப்பிட் டேன். தம் மனச்சாட்சிக்குப் புறம்பான எங்தச் செயலேயும்.