பக்கம்:காலத்தின் குரல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

துணை’ ஆக விளங்குவதற்கு மாருக கழுத்தறுப்பு ஆகக் கூடியவர்கள். இதனாலேயே, மனைவி என்பவள் ஒருவனேப் பற்றுகிற திராத நோய் , அவனது வாழ்க்கை பூராவும் தொல்லை தரக்கூடிய கடுமையான வியாதி என்று நான் எழுதியிருக்கிறேன்.

கணவனிடம் உள்ளுர வெறுப்பை வளர்க்கிறவள் மத்தியதர வர்க்கத்து மனைவி. மரியாதை காட்டுவது போல் நடந்துகொண்டாலும், நெருக்கடி நேர்கிற போது, அவன்” “இவன்' என்று பேசக்கூடியவள். கணவன் செத்த பிறகு, கஷ்ட காலத்தில் இருந்தும் கெடுத்தான், பாவிமட்டை செத்தும் கெடுத்தான்’ என்று புருஷஆன ஏசிப் புலம்புகிற பத்தினிகளை நசன் அவளை சேர்ந்தவர்களும் பழிப்பர்கள்

அப்படி எவரும், நான் செத்ததுக்குப் பிறகு கூட என்னை குறை கூறக்கூடிய பழிக்கு இடம் கொடுக்க லாகாது என நான் உறுதிபூண்டேன்.

சிலர் இயல்பாகவே துறவு உள்ளம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட இயல்பு என்னுடையதாக இருக்கலாம் எனது 17 - 19 வயதுகளில் ராமகிருஷ்ணர், விவேகா ந்ைதர், ராமதீர்த்தர், சிவானந்தா ஆகிய சுவாமிஜி" களின் நூல்களே எனக்கு மி கு தி யு ம் படிக்கக் கிடைத்தன. அவை என் உள்ளத்தை வெகுவாகப் பாதித்தன என்றே சொல்லவேண்டும். நான் பிரமச் சாரியாக வாழ்வது என்று தீர்மானித்ததுக்கு இதுவும் ஒரு காரணமே. பொறுப்புகள் இல்லாமல் வாழ்வதே எனக்குப்பிடிக்கும். கல்யாணம், மனைவி, குடும்பம் முதலியன பொறுப்பு களே அதிகம் சுமத்துகிற பிணைப்புகள். எனவே, அவற்றிலிருந்து ஒதுங்கினேன்,