பக்கம்:காலத்தின் குரல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ŽÉ அல்ல8 கண்ணன், சி சு செல்லப்பா, க. நா. சு. ஆகிய இலக்கிய வாதிகளின் துணையையும் அது விரும்பி ஏற்றது. முற்போக்கு இலக்கியத்தில் தீவிர வேகம் காட்டிய இலங்கை எழுத்தாளர்களுக்கும் "சரஸ்வதி ஆதரவு அளித்தது. சரஸ்வதி வியாபார வெற்றி பெற முடிந்ததில்லை. அதனுடன் போட்டி போடுவதுபோல் தாமரை” கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலேயே வளரலாயிற்று. ஜனரஞ்சகப் பத் தி ரி ைக க ள், பலவுத்திகளையும் கைாண்டு ஸர்குலேஷனை பெருக்கிக் கொண்டிருந் தன. இவ்வழியில் குமுதம் வெற்றிநடை போட்டு வந்தது. இதர பத்திரிகைகளும் அதைப் பின்பற்று வதில் ஆர்வம் காட்டின. மனித நேயத்தோடும், சமூகப் பார்வையோடும் எழுதப் பட்ட படைப்புகள் அதிகமாகத் தோன்றலாயின. எழுத்து காலச் சூழல் எப்படி இருந்தது? சரஸ்வதி நடைபெற்ற காலத்திலேயே எழுத்தும் நடந்தது. அரசியல் சார்பு, சமூகப் பார்வை போன்ற பரத்த நோக்கு கொண்ட இலக்கியப் போக்கை ஆதரிக்கின்ற சிறுபான்மையினரே எழுத்து"வின் ஆதரவாளர்கள். எழுத்து படைப்பு இலக்கிய முயற்சி களைவிட, விமர்சனத்தை வளர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆளுலும், அதன் ஆசிரியரான சி சு செல்லப்பாவே எதிர்பாராத விதத் தில், எழுத்து புதுக்கவிதையை வளர்க்கும் ஒரு அரங்கமாகவும், புதுக்கவிதையை இயக்கமாக வளர்க் கும் ஒரு சாதனமாகவும் அமைந்தது. எழுத்து’