பக்கம்:காலத்தின் குரல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ சு: 2 5 வருடைய இலக்கிய நோக்கும் போக்கும் வெவ்வேறு ரகமாக இருந்த போதிலும், தமிழ் இலக்கியத்தில் புதுமை சேர்த்தல் என்ற அடிப்படையில் அவர்கள் ஒன்றுபட்டு உழைத்தாங்கள். அக்காலத்திலும், வாசகர்களிடையே இ ல க் கி ய பிரக்ஞை அதிகம் இருந்ததில்லை. கனமான, ஆழ்ந்த - சிந்தனைக்கு வேலே கொடுக்கிற - படைப்புகளை (பொதுவாக, எரிேயஸ் லிட்டரேச்சர் முயற்சிகளை) விரும்பிப் படிக்கிற ரசிகர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். சரஸ்வதி கால இலக்கியச் சூழலேக் கூறுங்களேன் ‘சரஸ்வதி பத்திரிகை நடந்துகொண்டிருந்த காலத் தில் அரசியல் விழிப்பு அதிகம் ஏற்பட்டிருந்தது, கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவ லாக இருந்தது. சமுதாயப் பார்வையோடு எழுத வேண்டும் என்ற உணர்வு பெற்ற எழுத்தாளர்கள் தோன்றியிருந்தார்கள். "சரஸ்வதி முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பாடு படுவதைத் தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந் தது. சகுநாதன், ஆர். கே. கண்ணன், எஸ். ராமகிருஷ் னன் போன்ற கம்யூனிஸ் தத்துவப் பிடிப்புமிக்க எழுத் தாளர்களுக்கு அதிகம் இடம் கொடுத்த போதே, கம்யூனிஸ்ப் பற்றுதலிலிருந்து விலகிவிட்ட சுந்தர ராமசாமி, அத்தத்துவச் சார்பை மிகுதியாகப் பிரதி பலிக்காத ஜெயகாந்தன் ஆகியோருக்கும் இடம் தந்தது. அரசியல் தத்துவப் பிடிப்பு எதுவும் இல்லாத