பக்கம்:காலத்தின் குரல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மிகப் பல வகைகளிலும் வளர்ந்திருப்பது சிறுகதை தான். இதைத் தான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுதவேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடங்காத கலே சிறுகதைக்கலை, பிசாசுக் கதை, மாயாஜாலக் கதை, மந்திரதந்திரக்கதை முதலிய கற்பனை வேலைப் படைப்புகள் முதல், வாழ்க்கையின் சிறு சிறு அம்சங் னையும் மனிதர்களின் குணவிசித்திரங்களையும் சித் திரிக்கிற படைப்புகளையும், மனிதர்களின் அவலங்கள், வேதனைகள், கொடுமைகள், கோரங்கள் முதலிய வற்றை எடுத்துக்காட்டும் யதார்த்தப் படைப்புகளையும் பொதுவாக சகலவிதமான சிறுகதைகளையும் நான் எழுதியிருக்கிறேன். எதை வேண்டுமானலும் எப்படி வேண்டுமானுலும் எழுதலாம்; ஆனால், எழுதுவதை கலநயத்தோடு தரமான படைப்பாக ஆக்க வேண் டும் என்பதுதான் என் கொள்கை. சிவசு: உங்களுக்குப் பிடித்த மேதாட்டு, தமிழ்நாட்டு சிறு கதை ஆசிரியர் சிலரை கூறுங்கள், சேகாவ், டால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி. எர்னஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் ஃபாக்னர், வில்லியம் சரோயன், ஜேம்ஸ் ஜாய்ஸ், மாப்பசான், எட்கார் ஆலன் போ. தமிழில்: புதுமைப்பித்தன், லா. ச ராமாமிர்தம், மெளனி, கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, பி. எஸ். ராமையர. சி. சு செல்லப்பா, ரகுநாதன், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சூடாமணி