பக்கம்:காலத்தின் குரல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவக: 50 அல்வா, ஜாங்கிரி, லட்டு மட்டுமல்லாது, வேறு பல வடிவங்களிலும் வர்ணங்களிலும் கிடைக்கிற இனிப்பு தினுசுகளையும் ரசனே விரும்பத்தானே செய்கிறது? அது மாதிரித் தான் இதிலும் நூறுபூக்கள் மலரட்டும். ஒ5 வொரு பூவிலும் வெவ்வேறு வாசனையும் அழகு. இருக்கக்கூடும்’ என்ற மனே பாவமும் காரணம்: பரத்த ராசிக்கியம்’-(பரவலான ரசிகத்தன்மை) என் தும் கூறலாம். வாசகர்களா, அல்லது விமர்சகர்களா-இலக்கியத்தை, அதன் தரத்தை நிர்ணயிப்பது? வாசகர்களில், தேர்ந்த ரசனைத் திறம் பெற்ற அனுபவ ஞானிகள்;தான் இலக்கியத்தையும் அதன் தரத்தை யும் தின்னயிக்கிருக்கள். நேர்மையான விமர்சகன் தேர்ந்த ரசிகனே-அனுபவமும் தகுதியும் பெற்ற நல்ல வாசகனே-யாவன். உண்மையில், விமர்சனங்கள் எதையும் ஆக்குவதில்லை. விமர்சனங்கள் சினிமாப் படங்களின் தரத்தை உயர்த்திவிடவுமில்லை: மட்ட மான படங்களே பார்க்காதிருக்கும்படி ஜனங்களை பாதித்துவிடவுமில்லை. இதே நியதிதான் இலக்கிய விமர்சன விஷயத்திலும், விமர்சனங்களைப் படித்து விட்டு, எவரும் புத்தகங்கள் வாங்குவதுமில்ல; வாங்க விரும்பும் புத்தகத்தை வாங்காமல் இருந்து விடுவதுமில்லே . எவ்வளவு நேர்மையான, அல்லது கடுமையான, விமர்சனமும் ஆற்றல் நிறைந்த படைப் பாளியை அவனது போக்கிலிருந்து மாற்றுவதில்லை. சில விமர்சனங்கள் சில படைப்பாளிகளுக்கு எரிச்சல் எழுப்பலாம், ஆத்திரம் ஊட்டலாம், கோபம் தரலாம்; எனினும் படைப்பாளிகள் தங்கள் போக்கிலேயே எழு திக் கொண்டிருக்கிருர்கள்,