பக்கம்:காலத்தின் குரல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவசு:

பிறந்த ஊர் பற்றி கூறுங்களேன்.

வ.க:
எனது சொந்த ஊர் ராஜவல்லிபுரம். ஆயினும் நான் பிறந்த இடம் நாங்குனேரி தாலுகாவில் உள்ள திசையன்விளே.

அப்பா எக்சைஸ் சப் இன் ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்ததால் ஊர் விட்டு ஊர் மாறுதல் அடிக்கடி நேர்ந்தது.

திசையன்விளேக்குப் பிறகு தூத்துக்குடியில் எனது முதல் வருடம் கழிந்தது. அடுத்து ஒட்டப்பிடாரத்தில் ஒன்றரை வருஷம், பிறகு கோவில்பட்டியில் ஒன்றரை வருஷம்.

படிப்பது, எழுதுவது, ஊர் சுற்றுவது தான் என் வாழ்க்கை என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறேன். அதில் ஊர் சுற்றுதல்’ என்பது என் பிறப்புடனே ஆரம்பித்து விட்டது என்று கொள்ளலாம். வயல்களில் பச்சை பசேலென நெல் பயிரும், குளத்தில் நீரும் நிறைந்திருக்கையில் ராஜவல்லிபுரம் சூழ்நிலை மிக அழகாக இருக்கும். வறண்ட கோடைக் காலத்தில் சூழ்நிலை வெறுமை கண்களை உறுத்தும்.

ஊருக்குத்தெற்கே ஒரு மைல் தள்ளி தாமிரவர்ணி ஆறு அழகிய சூழ்நிலையில் தவழ்ந்து செல்கிறது. ஆனல் அந்த அழகை ரசிக்கக்கூடிய மனம் பெற்றவர்கள் இவ்வூரில் இல்லை.

செப்பறை என்ற நடராஜர் ஸ்தலம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. சிதம்பரத்துக்கு அடுத்த திருத்தலம் என்றும் இல்லைஇல்லை சிதம்பரம் மாதிரியேதான்