பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 372


11. இந்நாள் வரை பாளையக்காரர்களால் அளிக்கப்பட்ட இராணுவத் தொண்டு குறைக்கப்பட்டமையாலும் (காரியம்தான் முடிந்து விட்டதே! - ந.ச.) அதன் விளைவாகக் கம்பெனி பாளையக்காரர்களின் நலனையும் பாதுகாப்பையும் தாங்களே ஏற்றுக் கொண்டமையாலும், துப்பாக்கிகள், தீங்கு விளைவிக்கும் படைக்கலங்கள் முதலியவற்றை வைத்திருத்தல் மக்கள் பாதுகாப்பிற்குத் தேவையற்றதாகி விட்டது. ஆகையால் மன்றத் தலைவர் ஆளுநர் (கவர்னர்) அவர்கள், திண்டுக்கல், திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை முதலிய மாவட்டங்களிலுள்ள எல்லாரையும், அவர்கள் பாளையக்காரராயினும், கூலிகளாயினும் அல்லது மற்ற உள்நாட்டு மக்களாயினும் யாராயிருப்பினும் தங்கள் தங் களிடமுள்ள கைத்துப்பாக்கிகள், குழல் துப்பாக்கிகள், ஈட்டிகள் ஆகிய வற்றை அந்த மாகாணங்களில் படைகளை ஆணை செய்யும் அதிகாரி - படைத்தலைவன் அக்னியூ அவர்களிடமோ அல்லது அவரால் நியமிக் கப்பட்டவரிடமோ கொடுத்துவிடும்படி உத்தரவிடுகிறார்.

12. மன்றத் தலைவர் ஆளுநர் (கவர்னர்) இந்த முடிவைச் செயல்படுத்த உறுதியுடனிருப்பதால் அந்த நாடுகளில் நிலையான அமைதியை நிலவச் செய்யும் தூய உள்ளத்தோடு தொண்டு செய்யும் நோக்கம் தவிர வேறு எந்தக் குறிக்கோளோடும் செயல்படவில்லை. மேன்மை தங்கிய அவர் தலைவர்களோ அல்லது பரம்பரை நிலச் சொந்தக்காரர்களோ எந்த இழிவுக்குள்ளாக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விலக்கினார். ஆனால் அந்த நாடுகளில் பழக்கத்திலிருந்த படைக்கலப் பறிமுதல், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் நல்வாழ்வைச் சீராக்கவும் நீக்க இயலாத தேவைகளாயிருப்பதால் மன்றத் தலைவர் ஆளுநர் கவர்னர்) படைத் தலைவர்கள் தங்கள் மரபுவழி வழக்கமானதும் தற்போது பயனற்றதாகி விட்டதுமான படைக்கல முடைமையை மேற்கூறிய முக்கிய குறிக்கோளை அடைவதற்காக மனமுவந்து தியாகம் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறார்.

16. எட்வர்ட் பிரபு கிளைவ, மன்றத் தலைவர் ஆளுநர் (கவர்னர்), அவரைச் சார்ந்தோர் அனைவரும், கடந்த காலத்தில் ஒற்றுமையுடன் பெருமளவில் அச்சம் நிரம்பிய கலகங்கள் செய்தவர்களை முழுவதும் அடக்கிவிட்டமையால் தென் பாளையங்களில் எதிர்காலத்திற்கான நிலையான அமைதிக்கு அடிக்கல் நாட்டிவிட்டமையால், மேலும் இந்த அமைதியான அடிப்படைகளையும். பிரிவினையற்ற நிலையான கம் பெனி ஆட்சியையும் அந்த நாடுகளில் நிலை நாட்ட மன்றத் தலைவர் கடந்த காலக் கலகங்களினால் ஏற்பட்ட தண்டனைகளினால் விளைந்த உள்ளார்ந்த கவலைகளையும் அச்சங்களையும் தென்பாண்டி நாட்டவர்