பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கால் பந்தாட்டம்


பெற்றிருக்கும் இந்த ஆட்டம், குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை களிப்புடன் ஆடி மகிழ்கின்ற ஆட்டமாகவே எக்காலத்திலும் இருந்து வந்திருக்கிறது. “இதில் இல்லாத இன்பமே இல்லை” என்று இந்த ஆட்டத்தில் ஈடுபடுபவர்கள் மனம், பாடிக்கொண்டும் புகழ் சூடிக்கொண்டும் இருக்கிறது.

காலத்தால் பழமையானது என்று கூறியது, ஆதிகால மனிதன் அழகுற நிமிர்ந்து நிற்கப் பழகி, நிதானமாக நடக்கத் தொடங்கிய காலம். எதிரே கிடக்கும் பொருட்களை எத்திப் பார்த்து இன்பமடைகின்ற பழக்கம், எல்லாப் பருவத்தினருக்குமே எல்லா காலங்களிலுமே இருந்து வந்திருக்கிறது. அது கற்காலமாக இருந்தாலும் சரி, பொற்காலமாக இருந்தாலும் சரி, மக்கள் மனம் இப்படிப்பட்டதோர் செயலில் மகிழ்ந்தே கிடந்திருக்கிறது.

ஆகவே, கல்லெடுத்து எறிந்து, காலுக்குக் கிடைத்தப் பொருட்களை உதைத்துக் களித்த காலத்தில் கருவாகி, வில்லெடுத்துப் பழகி வேலெடுத்து ஒடி, வேட்டையாடி மகிழ்ந்த காலத்தில் உருவாகி, சொல்லெடுத்துப் பேசி இல்லெடுத்துக் குடியேறி, சொகுசாக வாழ்ந்த காலத்தில் திருவாகிப் பிறந்த விளையாட்டுக்களில், கால் பந்தாட்டமும் ஒன்றாகக் கனிந்திருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வரலாற்றுக்குமுன் பிறந்து, மலர்ந்து, சிறந்து விளங்கிய இந்த ஆட்டம், எங்கெல்லாம் மனித இனம் மன வளர்ச்சியுற்று மாண்புமிகு நாகரிக வளர்ச்சியில் திளைத்ததோ, அங்கெல்லாம் நீக்கமற நிறைந்திருந்ததனால்தான், எங்கு தோன்றியது இந்தக் கால் பந்தாட்டம்