பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 79 இல்லாததாலே, அம்பலத்திற்குச் சென்று விடுவீராக! அதுவே உமக்குப் பொருந்தும்! திருவொற்றியூர், திருவாரூர் என்றது ஊர்ப் பெயர்களை, ஒற்றி - ஒற்றிவைத்தல் எனவும், எவர் ஊரில் இருப்பீர் எனவும் நயமாக அமைத்தனர். இருக்கும் ஊர் ஒற்றியூர், திருவாரூரிலும் இருப்பவர் நீரே, இனி அம்பலத்தே போய் நடனமாடுபவரும் நீரே! என்று போற்றுகின்றார் கவிஞர். ஏன் நஞ்சு தின்றார்? மனிதர்கள் வறுமையிலே வாடும்போது மனம் வெறுத்து நஞ்சைத் தின்று சாவதற்குக் கருதுவார்கள். வாழ்வில் வெறுப்பு ஏற்படுவதும் சில சமயங்களில் தற்கொலைக்குக் காரணமாகலாம். ஒருவர், சிவபெருமான் நஞ்சினை உட்கொண்ட சிறப்பினை வியந்து கூறிக்கொண்டிருந்தார்.மயிலாடுதுறை என்னும் தலத்திலே நிகழ்ந்த நிகழ்ச்சி இது. அதனைக் கேட்டுக் கொண்டிருந்த காளமேகம். இப்படி ஒரு பாடலைச் சொல்லி அவரைத் திகைக்க வைக்கின்றார். வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத் தெள்ளுமையாள் அஞ்சலஞ்ச லென்றுதின மண்டையிலே தானிருக்க நஞ்சுதனை யேனருந்தி னார்? (119) வள்ளல் எனும் பெரிய மாயூரநாதருக்கு - வள்ளன்மை உடையவர் என்று புகழ்பெற்றவரான மாயூரநாதருக்கு, வெள்ளி மலையாகிய கைலாயமும் பொன்மலையாகிய மகா மேருவுமே சொந்தாயிருக்கும் பொழுதும், தெள் உமையாள் தினம் அஞ்சலஞ் சலென்று அண்டையிலே தானிருக்க தெளிந்த அறிவுடையவ ளான உமையம்மையானவள், நாள்தோறும், அஞ்ச வேண்டாம் அஞ்ச வேண்டாம் என்று சொல்லியவளாக அவரின் அருகிலேயே இருக்கும்பொழுதும், நஞ்சுதனை ஏன் அருந்தினார் விரக்தியுற்றுப் பெருமான் ஏனய்யா நஞ்சினை உட்கொண்டார்? (மாயூரம் - மயிலாடுதுறை இப்பொழுது மாயவரமாகிச் சிதைந்து வழங்கும் பழைய ஊர்) புற்று மண் வைத்தீச்சுரன் கோயிலில் புற்றுமண் சிறப்பாகும். அதனை குறித்துக் காளமேகம் பாடுகிறார். தம்மை மதியாத சம்பந் தாண்டான்மீது காளமேகம் வசைபாட, அதனால் இவருக்கு நோய் வந்தடைந்தததாம். அந் நோயினின்றும் வைத்தீசர் கோயிற் புற்றுமண்ணை உண்டு இவர் விடுபட்டாராம். அப்போது அதனைச் சிறப்பித்துப் பாடியது இது என்பது வரலாறு.