பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் வனும் ஆவான். அதனாற்போலும் அவன் ஊர்கின்ற எருதானது, நடக்க அறியாததாகி, நான்கு கால்களையும் முடக்கிக்கொண்டு கிடப்பதற்கு மட்டுமே அறிந்ததாயிருக்கின்றது! அஃதன்றிப் புல்லும் தண்ணீரும் கேட்பதற்கும் அஃது அறியாது கிடக்கின்றது.” "அவனே ஒட்டில் இரந்து உண்கிறவன்; அவன் ஏறும் எருதுக்கு, எங்கே புல்லும் தண்ணிரும் தரப்போகிறான். அதனால், அதுவும் அவற்றைக் கேட்பதற்கும் அறியாததாகிக் கிடக்கிறது போலும்' என்கின்றனர். கும்பகோணத்தான் சிவபிரான் ஒளிப்பிழம்பாக நின்ற காலத்துத் திருமால் அடிதேடிச் சென்று காணாது அயர்வுடனே திரும்பினான். அந்த நிகழ்ச்சியை நினைவிற்ாெண்டு, கும்பகோணத்து இறைவனை இப்படி போற்றுகின்றார் கவிஞர். அம்பாகி னான் பாத மன்றுபிடித் தாயவற்குன் செம்பாதங் காட்டாத் திறமென்னோ - உம்பர்தொழும் நம்பகோ ணத்தானே நாகச் சிலைவளைந்த கும்பகோணத்தானே கூறு. (158) "திரிபுர தகன காலத்திலே மகா விஷ்ணுவே நினக்கு அம்பாகினான். அப்படி அம்பாகியவனின் பாதத்தை அன்று கையாற் பிடித்து எய்தவன் நீயே யாவாய்! அப்படி நின்னால் அன்று பாதம் பிடிக்கப்பட்ட அவனுக்குப் பின்னர் நீ நின்னுடைய சிவந்த பாதமலர்களைக் காட்டியருளாத நின் தன்மைதான் என்னவோ? தேவர்களும் தொழுது போற்றுகின்ற முடிவான பொருளாக விளங்கும் பெருமானே! மேருமலையாகிய வில்லினை அன்று வளைத்த, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமானே! நின், அந்தத் தன்மையினை எனக்கு விளங்கக் கூறுவாயாக' அன்று திருமாலின் காலைப் பிடித்த நீ, அவன் நின் காலைப் பிடிக்கத் தேடியும், அவனுக்குக் காட்டா திருந்தனையோ? இதுதான் நியாயமோ? என்கிறார் கவிஞர். ஏனோ தலையிறைஞ்சினி திருவிரிஞ்சி நகருக்கு இறைவனான சிவபெருமானைப் போற்றியது இது. பெருமான் தலைகவிழ்ந்தவராயிருப்பது பற்றிக் கவிஞர் அவரை இவ்வாறு வினவுகிறார். தலை கவிழ்வது அவமானத்தினாலேதான் என்பவர். அது எனதால் வந்துற்றது? எனவும் கேட்கிறார். வேண்டிய சைவனார் விட்டது துக்கோமுன் பாண்டியனார் கையிலடி பட்டதற்கோ-ஆண்டவரே