பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 121 நீச்சாற் பெருத்திடுங் காவேரி யாற்றை நிலைநிறுத்திச் சாய்ச்சா ளிலைக்கறிச் சாற்றையெல் லாமது தானுமன்றிக் காய்ச்சாப் புளியும்.நற் கல்லுடன் சோறும் கலந்துவைத்த ஆச்சாளை யான்மறவேன் மறந்தான் மன மாற்றிடுமோ? (192) "வெள்ளத்தினாலே மிகுந்திடும் காவேரியாற்றைத் தடுத்து நிறுத்திக் கீரைச்சாற்றினை வெள்ளமாக என் இலையிலே சாய்த்தாள்; அதுவும் அல்லாமல்அந்தக் கீரைச் சாற்றிலிட்ட புளி கொதிக்கவும் இல்லை; அத்துடன் நல்ல கற்களோடு சோற்றையும் சிறிதே கலந்து இலையிலேயும் வைத்தாள். இப்படி எனக்கு உணவளித்த அந்த அம்மையை, யான் எந்நாளும் மறக்கவே மாட்டேன்; அப்படி நான் ஒருவேளை மறந்தாலும், என் மனம் அதனை என்றாவது மறந்திடுமோ?” மறவாதென்பது கருத்து. பட்டரின் ஈகை திருப்பனந்தாளிலே ஒரு பட்டர் இருந்தார். அவருடைய சோற்றுக் கொடையினைச் சிறப்பித்து இப்படிப் பாடுகிறார் கவிஞர். - விண்ணிரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்பி மழைத் தண்ணிரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே உண்ணி ருண்ணிரென் றுபசாரஞ் சொல்லி யுபசரித்துத் தண்ணிரும் சோறுந் தருவான் திருப்பனந் - தாட் பட்டனே. (193) "வானத்திலிருந்து பெய்கின்ற மழைவளமும் இல்லாமற் போய், நிலத்தினின்று கிடைக்கும் ஊற்று நீரும் வெளிவராமல் வற்றிப்போய், புலவர்கள் உணவற்றுத் தவிக்கின்ற காலத்திலே, மனம் விரும்பி, உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உபசார வார்த்தைகளைச் சொல்லி உபசரித்துத், தண்ணீரும் சோறும் அவர்களுக்குத் தருபவன், திருப்பனந்தாள் பட்டவன் ஒருவனே யாவான்.” - விண்ணிர் - ஆகாய கங்கை எனவும் உரைப்பர். . அமராபதியார் விருந்து அமராபதிக் குருக்கள் என்பவர், ஒருநாள் கவிராயருக்குப் பலவகைக் கறிகளுடனே சிறந்த விருந்து ஒன்றினை நடத்தினார். விருந்தின் சிறப்புக் கவிஞரின் செய்யுளாக இப்படி மணக்கிறது.