பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 135 எள்பது அந்தச் செய்யுள். அதன்கண், தன்னுடைய பருவ முதிர்ச்சியை ஒப்பனைகளால் மறைத்துக்கொண்டு மினுக்கிக் குலுக்கி வந்த வல்லி’ என்னும் தாசியைக் கம்பர் பெருமான் நகையாடியதைக் கண்டோம்.அந்தச் செய்யுளைப் போலவே, தமிழ் நாவலர் சரிதையுள், காளமேகம் பாடியதாகவே ஒரு செய்யுள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதனை நாம் இங்கே காண்போம். திருக் கண்ணபுரத்திலே காளமேகத்திற்கு எங்கும் எதிர்ப் பாகவே இருந்ததை அவரது செய்யுட்கள் பலவும் நமக்கு உணர்த்துகின்றன. அவ்வூர்த் தாசியருள் ஒருத்தி தீர்த்தாள் என்பவள். அவளுடைய வனப்பை இகழ்ந்து கவிஞர் பாடிய வசை இது. கந்த மலரயனார் கண்ணபுர மின்னாருக் கந்தவிள நீரை முலை யாக்கினார்-சந்ததமுந் தோற்றமுள தீர்த்தாட்குத் தோப்பைமுலை யாக்கினார் ஏற்றமெவர்க் காமோ வினி? (217) “தாமரை வாசராகிய பிரமதேவர், திருக்கண்ணபுரத்திலே வாழ்பவரான பிற பெண்களுக்கெல்லாம், அழகிய தென்னங் குரும்பைகளை மட்டுமே மார்பகங்களாகப் படைத்தனர். ஆனால், எப்போதும் கவர்ச்சியாகத் தோற்றும்படி வருகின்ற இந்த தீர்த்தாளுக்கோ, அவர் தென்னந்தோப்பையே மார்பகங்களாக்கி விட்டனர். இனி, இவர்களுள் சிறப்பு எவர்க்கு ஆகும்? சிறந்த தீர்த்தாளுக்குத்தான் என்பது போலத் தோன்றினாலும், தோப்பை என்ற சொல்லைத் தோற்பை எனப்பகுத்து, 'தோலா கிய பை' எனப் பொருள் கண்டு, அவளை இகழ்ந்து பாடியதாகவே கொள்ளல் வேண்டும். குடவாசல் விண்ணாள் திருக்குடவாசல் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரூர். இவ்வூரிலே வாழ்ந்திருந்த விண்ணாள் என்பவள் மிகவும் குறும்புக்காரி, காளமேகப் புலவரிடம் சென்று தன்னைப்பற்றியும் ஒரு வசைகவி பாடுமாறு கேட்டாளாம். அவள் அழகுள்ளவள், அவள் மீது அன்புடையவர் கவிஞர். என்றாலும் அவளுடைய வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியவில்லை. அதனால், இந்தச் செய்யுளைப் பாடினர். செக்கோ மருங்குல் சிறுபய றோதனஞ் சிக்கலிதம் வைக்கோற் கழிகற்றை யோகுழி யோவிழி வாவிதோறும் கொக்கேறி மேய்குட வாசல் விண்னாள் வரைக் கோம்பி யன்னீர் எக்கோ படைத்தது நீரே நெருப்பில் எரிந்தவரே! (2.18)