பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கடுங்காற்றும் கடுநட்பும் பிறவாநெறி காட்டியார் என்றொரு தமிழ் அறிஞர். அவரும் காளமேகத்தின் கவித்திறத்தைக் காண எண்ணினார். “க்டுங்காற்று மழைகாட்டும்; கடு நட்புப் பகை காட்டும்" என்ற உலக வசனத்தை இறுதியிலே அமைத்து ஒரு வெண்பா சொல்வீராக என்றார். நீரோ பிறவா நெறிகாட்டி யாரெமக்கு நீரோ சமிசை நிலையிட்டீர்-நீரோயில் விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட் டுங்கடுநட் புப்பகைகாட் டும். (42) பிறவா நெறி காட்டியார் நீரோ - பிறவாத தன்மைக்கு உரிய வழியினைக் காட்டிய ஞானவான் என்பவர் நீர் தாமோ? எமக்கு நீரோ சமிசை நிலையிட்டீர் - எனக்கு இப்படிப்பட்ட சமிசையை ஏற்படுத்தியவரும் நீர்தாமோ? இவ் விங்களம் ஏன் செய்தீர்? விடும் - இத்தகைய வேறுபாட்டை எதற்காகச் செய்தீர்? இனியேனும் விட்டுவிடுவீராக; கடுங்காற்று மழை காட்டும் வேகமாக வீசும் காற்று மழையினைக் கொணரும், கடுநட்புப்பகை காட்டும் விரைந்த நட்பு (ஆராயாது விரைந்து கொள்ளும் நட்பு) பகையினைக் கொண்டு வந்துவிடும். பிறவா நெறி காட்டியார் என்ற பெயரினைக் கொண்டு அவர் அதற்கேற்ப அகந்தை அற்றவராக விளங்கவேண்டிய தாயிருக்க, சமிசைகொடுத்து அகந்தை கொண்டாராதலினால், இப்படிப் பாடி அவரைத் தலைகவிழச் செய்தனர் கவிஞர். குரங்கும் இடமும் 'குரங்கு என்று தொடங்கி இடம் என்று முடியுமாறு ஒரு செய்யுள் செய்க என்றார் ஒருவர். அவருக்கு அதே குறும்புடன் பாடல் சொல்லுகிறார் காளமேகம். குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தோள்கொட்ட கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ-விரைந்துபோய் பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால் எத்தனைபார் சேட்டைக் கிடம். (43) ஒரு குரங்கானது நெருப்பிலே வீழ்ந்துவிட்டது. அதனால் வெறிகொண்டதாயிற்று. அப்போது ஒரு தேள் அதனைக் கொட்டிற்று. பாம்பு ஒன்று அதன் கையிலே சுற்றிக்கொண்டது. நண்டு வேறு அதனைக் கவ்வியது. அதன் நிலையைக்கண்டு பேயொன்றும் விரைந்துசென்று அதனைப் பற்றிக் கொண்டது. அதன்பின், கள்ளினையும் அது குடித்தது. இத்தனையும் போதா வென்று, அந்தக் குரங்கு பச்சைமிளகையும் கடிக்குமானால், அதன் சேட்டைகளுக்கு இடமாவன எத்தனை? அதனை நீயே நினைந்து காண்பாயாக!