பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 31 "நீயே பார்' என்றது, அந்தப் புலவரைக் குறும்பாகச் சொன்னதாம். நீயே! செய்து பார்’ எனச் சொன்னதும் ஆம். இதன் உட்கருத்து நும் குரங்குச் சேட்டைகட்கு யாம் அஞ்சோம்' என்பதாம். புங்கங் கொம் பங்கிங் கொன்பது "புங்கங் கொம்பு அங்கு இங்கு ஒன்பது என வருமாறு வெண்பாவில் அமைத்துப் பாடுவீரர்க' என்றார் ஒருவர். அப்படியே சாதுரியமாகப் பாடியது இது. எங்கண் மடத்துக் கெரிதுரும்பு வெட்டுதற்குப் புங்கங்கொம் பங்கிங் கொன் பதுபுளி-யங்கொம்பங் கிங்கொன்ப துவெட்டி நறுக்கிய வெள்வெலங் கொம்பங் கிங்கொன் பது. (44) - எங்கள் மடத்துக்கு எரி துரும்பு எங்கள் மடத்திற்காகத் தறித்துக்கொண்ட எரிக்கும் கட்டைகள் (விறகு), அங்கு இங்கு - அங்கும் இங்குமாகக் கொணரப்பட்டவை, புங்கங்கொம்பு ஒன்பது - புங்கமரத்துக்கிளைகள் ஒன்பதும் அங்கு இங்கு புளியங்கொம்பு ஒன்பது அங்குமிங்குமாகத் தறிக்கப்பட்ட புளியங்கிளைகள் ஒன்பதும், அங்கு இங்கு வெட்டி நறுக்கிய வெள்வேலம் கொம்பு ஒன்பது அங்குமிங்குமாக வெட்டி நறுக்கி கொணர்ந்த வெள்வேல மரத்தின் கொம்புகள் ஒன்பதும் ஆகும். அப்பா யார்க்கும் இனிது! 'அப்பா என்று தொடங்கி, யார்க்கும் இனிது என்று முடித்து ஒரு வெண்பாச் சொல்லுக' என்றார் ஒருவர். கவிஞரும் அவ்வாறே சொன்னது இது. அப்பா குமரகோட் டக்கீரை செவ்விலிமேட் டுப்பாகற் காய்பருத் திக்குளநீர் - செப்புவா சாற்காற்றுங் கம்பத் தடியிற் றவங்கருமா றிப்பாய்ச்சல் யார்க்கும் இனிது. (45) அப்பா - அப்பனே! குமர கோட்டக் கீரை - குமர கோட்டத்தின் அருகாமையிற் பயிரிடப் பெறுகின்ற கீரையும், செவ்விலி மேட்டுப் பாகற்காய் செவ்விலி மேடு எனுமிடத்தில் பயிரிடப் பெறும் பாகற்காயும், பருத்திக் குளநீர் - திருப்பருத்திக் குன்றத்தேயுள்ள தண்ணிரும், செப்புவாசற்காற்றும் காஞ்சீபுரங் கோவிலின் தெற்குக் கோபுர வாசலிலே வருகின்ற காற்றும், கம்பத் தடியில் தவம் - திருவேகம்பர் வீற்றிருக்கும் மாமரத்தடியிலே தவம் செய்தலும், கருமாறிப் பாய்ச்சல் - கருமாறி என்பதன் நீரைப் பாய்ச்சலும், யார்க்கும் இனிது - எல்லோருக்கும் இனிதாயிருப்பவை ஆம்