பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 35 மீதிலும் ஆபரணமாக இருக்கும்; வெஞ்சினத்திற் பற்பட்டால் மீளாது அதன் கொடிய சினத்திலே அதனுடைய நச்சுப்பல் எவர் மீதாவது பட்டதானால் அவர் உயிர் போய்விடுவதன்றி ஒரு போதும் மீளாது. வாழைப்பழம்: நஞ்சிருக்கும் நன்கு கனிந்ததால் நைந்து இருக்கும்; நாதர் முடி மேல் இருக்கும் இறைவன் திருமுடி மேலாக அபிடேகம் பொருளான பஞ்சாமிர்தமாகவும் விளங்கும்; வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - துணையுணவாகக் கொள்ளுங் காலத்தே பற்களிடையே சென்றானால், வயிற்றுனுட் செல்வதல்லாமல் மீள்வதில்லை; வெஞ்சினம் - தொடுகறி, துணை உணவு. பாம்புக்கும் எள்ளுக்கும் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளனவே யோது. (51) பாம்பு ஆடிக்குடத்து அடையும் படமெடுத்து ஆடியபின் குடத்திலே சென்று அடைந்திருக்கும்; ஆடும் போதே இரையும் ஆடுகின்ற போதிலேயே சீத்துப் பூத்தென்று இரைச்சலிடும்; மூடித் திறக்கின் முகம் காட்டும் - குடத்தை மூடித் திறந்தால் தன் தலையை வெளியே உயர்த்திக் காட்டும்; ஒடி மண்டை பற்றில் பரபரெனும் . விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டாற் பரபரென்று சுற்றிக் கொள்ளும்; பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் - உலகிற் பிளவு பட்ட நாக்கும் அதற்கு உண்டாயிருக்கும். எள்: ஆடிக் குடத்து அடையும் - செக்கிலே ஆடி எண்ணெ யாகிக் குடத்திலே அடைந்திருக்கும்; ஆடும்போதே இரையும் செக்கிலே ஆடும்பொழுதிலேயே இரைச்சல் செய்யும்; மூடித் திறக்கின் முகங்காட்டும் - குடத்து எண்ணெயை மூடிவைத்திருந்து பின் திறந்து பார்த்தால் பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும்; ஒடி மண்டை பற்றில் பரபரெனும் விரைய மண்டை யிலே தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக் கும்; பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் - உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும். (இதனால்) உற்றிடு பாம்பு எள்எனவே ஒது அடைந்திடும் பாம்பும் எள்ளும் சமமாகும் என்று சொல்லுக. பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் பெரியவிட மேசேரும் பித்தர் முடி யேறும் அரியுண்ணு முப்புமே லாடும்-எரிகுணமாம் தேம்பொழியும் சோலைத் திருமலை ராயன்வரையில் பாம்பு எலுமிச்சம் பழம். (52)