பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் தேம் பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில் - தேன் பொழிந்து கொண்டிருக்கின்ற சோலைகளையுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிலே, பாம்பும் எலுமிச்சம் பழம் - பாம்பும் எலுமிச்சம் பழத்தினைப் போல்வதாகும். அஃது எங்ங்னமெனில், பாம்பு: பெரிய விடமே சேரும் - மிகுதியான விஷத்தை உடையதாயிருக்கும்; பித்தர் முடிமேல் இருக்கும் - பித்தனான சிவபெருமானின் திருமுடி மேலும் விளங்கும்; அரி உண்ணும் - காற்றைப் புசிக்கும்; உப்பும் - அதனால் தன் உடலை உப்பிக் கொள்ளும்; மேல் ஆடும் மேலாகத் தலைதூக்கி ஆடும்; எரிகுணம் ஆம் சினமுடைய குணத்தினதும் ஆகும். எலுமிச்சம் பழம்: பெரியவிடமே சேரும் - பெரியவர் களிடத்தே கொடுக்கப்பட்டுச் சேர்ந்தும் இருக்கும்; பித்தர் முடிமேல் இருக்கும் - பித்தானோரின் தலைமீது தேய்க்கப் பட்டு அதனைப் போக்கும் மருந்தாகவும் விளங்கும்;அரியுண்ணும் உப்புமேலாடும் (ஊறுகாயாகச் செய்யும் பொழுது) அரியப்பட்டு உப்புதூவி வைக்கப்பெறும்; எரிகுணம் ஆம் அதன் சாறுபட்டால் எரிச்சலைத் தருகிற குணத்தினை உடையதும் ஆகும். முகுந்தனுக்கும் முறத்துக்கும் வல்லரியா யுற்றிடலால் மாதர்கையிற் பற்றிடலால் சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதால்-வல்லோர் அகந்தனிலே வாழ்தலால் அகன்றுல களந்த முகுந்தனுமே யாகும் முறம், (53) அன்று உலகு அளந்த முகுந்தனும் முறம் ஆகும் அந்நாளிலே வாமனாகிய உலகளந்த திருமாலும் முறத்திற்கு ஒப்பாவான். எங்ங்னமெனில், முகுந்தன் வல் அரியாய் உற்றிடலான் வல்லமைகொண்ட நரசிங்கமாகத் தோன்றியதனாலும்; மாதர்கையிற் பற்றிடலால் ஆய்ப்பாடியிலே பெண்களின் கையினாலே பிணிக்கப்பட்ட தாலும் சொல் அரிய மாபுடைக்கத் தோன்றுதலால் சொல்லு வதற்கு அரிதான குவலயாபீடம் என்றும் யானையைக் கொல்லு வதற்கு அவதரித்தமையினாலும்; வல்லோர் அகந்தனிலே வாழ்தலால் வல்லமையுடையோரின் உள்ளங்களிலே வீற்றிருந் தாலும் (காத்தற் கடவுள் ஆயினமையின்) முறம்: வல்லரியாய் உற்றிடலான் - கொழித்தற்கு ஏற்றதொரு கருவியாய் அமைதலானும், மாதர் கையிற் பற்றிடலால் - பெண்கள் கையிற் பற்றிப் பயன்படுத்தலாலும், சொல்லரிய மால்புடைக்கத் தோன்றுதலால் - சொல்லுதற்கு அரிதான மாவினைப் புடைப் பதற்குப் பயன்படுத்தலாலும், வல்லோர் அகந்தனிலே வாழ்வதால்