பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 37 - பலருடைய வீடுகளிலும் இருத்தலாலும் என்க. (பல்லோர் வல்லோர் என முதல் சிறந்து வந்தது). சந்திரனுக்கும் மலைக்கும் நிலவாய் விளங்குதலா னிள்வான் படிந்து சிலபோ துலாவுதலாற் சென்று-தலைமேல் உதித்து வரலா லுயர்மா மலையை மதிக்கு நிகராக வழுத்து. (54) மதி. நிலவாய் விளங்குதலான் நிலவொளி தருவதாக விளங்குவதானாலும் நீள்வான்படிந்து சிலபோது உலாவுதலால் - நெடிய வானிடத்தே பொருந்திச் சில காலத்துச் சஞ்சரிப்பத னாலும், சென்று தலைமேல் உதித்து வரலால் - மறைந்து சென்று மீளவும் உதித்துத் தலைக்கு மேலாக வானிடத்தே வருகின்றத னாலும்; மலை: நிலவாய் விளங்குதலான் - பூமியினிடத்ததாக விளங்குதலினாலும், நீள்வான் படிந்து சிலபோது உலாவுதலால் நெடிய வானத்தே அளாவிச் சில மலைப் பூக்கள் விளங்கப் பெற்றிருப்பதாலும், சென்று தலைமேல் உதித்து வரலால் - பூமியில் தொடராகப் பரவித் தலைக்கு மேலாக உயரத்தே எப்பொழுதும் தோன்றி விளங்குவதனாலும்; உயர் மா மலையை மதிக்கு நிகராக வழுத்து - உயரமான பெரிய மலையினைச் சந்திரனுக்கு ஒப்புடையதாகச் சொல்லுக. நாய்க்கும் தேங்காய்க்கும் ஒடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாகு-சேடியே தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில் தேங்காயு நாயுநேர் செப்பு. (55) சேடியே தோழியே! தீங்குஆயது இல்லாத் திரு மலைராயன் வரையில்-தீமை எனப்படுவது இல்லாதே இருக்கின்ற திருமலைராயனின் எல்லைக்குட்பட்ட நாட்டிலே, தேங்காயும் நாயும் இணை செப்பு - தேங்காயும் நாயும் ஒப்பிட்டு உரைத்துக் கொள்க, எங்ங்னமெனில்; தேங்காய்: ஒடும் இருக்கும் தனக்கு ஒர் ஒட்டையும் உடையதாயிருக்கும்; அதன் உள்வாய் வெளுத்திருக்கும். அந்த ஒட்டின் உட்புறம் வெண்மையான தேங்காயைக் கொண்டிருக்கும்: நாடும் குலை தனக்கு நாணாது - அனைவராலும் விரும்பப்படும் குலையாகத் தொங்குவதற்கும் அது கோணுவதில்லை;