பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 39 வேசை கட்டித் தழுவுதலால் - தன்னிடத்து வருவாராற் கட்டி அணைக்கப்படுவதானாலும், கால் சேர ஏறுதலால் - கால் பொருந்த அவர்களால் அனுபவிக்கப் படுதலாலும், எட்டிப் பன்னாடை இழுத்தலால் அவர்களாலே நெருங்கிச் சிறந்த அவள் ஆடை இழுக்கப்படுதலாலும், முட்டப்போய் ஆசை வாய்க் கள்ளை அருந்துதலால் - நெருங்கிச் சென்று அவளுடைய வாயிடத்து ஊறலாகிய மது ஆசையுடன் அருந்தப்படுகின்றத னாலும்; அப் பனையும்வேசை எனலாமே விரைந்து - நாமும் விரைந்து அந்தப் பனையையும் வேசைபோன்றது என்று சொல்லலாம். அப்பனையும் வேசை எனலாம் என்றசொற்கள் தரும் குறும்பான பொருள் நயத்தையும் உய்த்து அறிக. தென்னைமரத்திற்கும் வேசைக்கும் பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேற்சுற்றும் கோர விளநீர் சுமந்திருக்கும் -நேரேமேல் ஏறி யிறங்கவே இன்பமாந் தென்னைமரம் கூறுங் கணிகையென்றே கொள். - (58) தென்னை மரம் - தென்னை மரமானது, கூறும் கணிகை என்றே கொள் - சொல்லப்படும் கணிகைக்குச் சமமானதாகும் என்று சொல்லப்படும் கணிகைக்குச் சமமான தாகும் என்று சொல்வாயாக, எங்ங்னமெனில், தென்னை மரமானது: பாரத் தலைவிரிக்கும் - நாற்புறமும் பரவியிருக்கும்படியாகத் தன் உச்சியின் ஒலைகளை விரித்துக் கொண்டு நிற்கும்; பன்னாடை மேற்சுற்றும் - அதன் மேலாக செருவல்கள் சூழ்ந்து கொண்டிருக்க விளங்கும்; சோர இளநீர் சுமந்திருக்கும் ஒலைகளுக்கு இடையே மறைவாக இளநீர்க் காய்களைச் சுமந்துகொண்டிருக்கும்; நேரே மேல் ஏறி இறங்கவே இன்பமாம்-முறையாக மேலே ஏறி அவ் இளநீரை அருந்தி இறங்கி வந்தால் அது மிகவும் இன்பம் உடையதாயிருக்கும்; கணிகையானவள்: பாரத் தலைவிரிக்கும் - நாற்புறமும் சோர்ந்து பரவுமாறு கூந்தலைத் தொங்கவிட்டிருப்பாள்; பன்னாடை மேற்சுற்றும் சிறப்பான ஆடைகளைத் தன் மேற்சுற்றிப் புனைந்திருப்பாள்; சோர இளநீர் சுமந்திருக்கும் இடை தளரும்படியாக இளநீரைப் போலப் பூரிப்புடன் விளங்கும் கொங்கைகளைச் சுமந்தவளாக இருப்பாள், நேரே மேல் ஏறி இறங்கவே இன்பமாம் - நேரிதாக அவளை அணைத்துக் கூடுவதனால் இன்பமும் உண்டாகும். -