பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் வெற்றிலைக்கும் வேசைக்கும் கொள்ளுகையா னிற் குறிக்கையான் மேலேறிக் கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் - தெள்ளுபுகழ்ச் செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில் வெற்றிலையும் வேசையா மே. (59) செற்றவரை வென்ற தன்னோடு பகைத்து வந்தவரை வெற்றிகொண்ட, தெள்ளுபுகழ்த் திருமலைராயன் வரையில் - தெளிவான புகழினையுடைய திருமலைராயனின் மலைச் சாரலிலே, வெற்றிலையானது: நீர் கொள்ளுகையால் - நீர் மிகுதி யாகப் பாய்ச்சப்பெற்று வளர்வதனாலும், நீரிற் குளிக்கையால் - நீரிலே கழுவப்படுதலாலும், மேல் ஏறிக்கிள்ளுகையால் மேலாக எடுத்துக் கிள்ளிவிட்டே உண்ணப்படுதலினாலும், கட்டிக் கிடக்கையால் விற்பனைப் பொருட்டாகக் கட்டி இணைத்து வைக்கப் பெறுவதனாலும்; வேசையானவள்: கொள்ளுகையால் - தன்பால் பணம் தந்து வருபவர் எவரேனும் அவரை ஏற்றுக் கொள்ளுகையினாலும், நீரிற் குளிக்கையால் நீரிலே முழுகிக் குளிக்கின்ற தன்மையாலும், மேல் ஏறிக்கிள்ளுதலால் - அணைத்து நகக் குறிகள் பதிக்கப் பெறுதலாலும், கட்டிக் கிடக்கையால் கட்டித் தழுவி இன்புறக் கிடத்தலினாலும், - வெற்றிலையும் வேசையாமே - வெற்றிலையும் வேசை போலாவது எனலாம். கண்ணாடிக்கும் அரசனுக்கும் யாவருக்கும் ரஞ்சனை செய்தியாவருக்கு மவ்வவராய் பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் - மேவும் எதிரியைத்தன் னுள்ளாக்கி யேற்ற ரசத்தால் சதிருறலா லாடியர சாம். (60) கண்ணாடியானது: யாவருக்கும் ரஞ்சனை செய்து அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியும், யாவருக்கும் அவ்வவராய்ப் பாவனையாய் - யாவருக்கும் அவ்வவராகக் காட்டும் தன்மையுடையதாகியும், தீ தகலப் பார்த்ததலால் - தீமை விலக மங்கலப் பொருளாகக் கருதிப் பார்க்கப்படுதலாலும், மேவும் எதிரியைத் தன்னுள் ஆக்கி - தன்னை அணுகும் எதிர்ப்படுவாரைத் தன்னுள்ளே ஆக்கிக் கொண்டு காட்டி, ஏற்ற ரசத்ததால் சதிருறலால் தன் பின்புறத்து ஏற்றிருக்கும் ரசத்தினாலே சிறப்பு அடைதலினாலும்,