பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பரம்பொருள் எது? தில்லைக் கோயிலுள்ளே நடராசர் சந்நிதிக்கு அருகேயே கோவிந்தராயர் சந்நிதியும் இருக்கிறது என்றோம். காளமேகம் தில்லைப் பெருமானைத் தொழுது போற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராயரின் கோவிலைச் சேர்ந்த நம்பியார், 'விஷ்ணுவே பரம் என்று உரக்கச் சொல்லினார். அதைக் கேட்ட காளமேகம் இப்படிக் கூறுகிறார். சத்தாதி யைந்தையும் தாங்காத தெய்வம் தனிமறையும் கர்த்தா வெனுந்தெய்வம் அம்பலத் தேகண்டு கண்களிரு பத்தான வண்மைந்தன் பொய்த்தேவி யைக்கொல்லப் பார்த்தழுத பித்தான வன்றனை யோதெய்வ மாகப் பிதற்றுவ தே? (97) சத்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்னும் ஐந்து தன் மாத்திரைகளாகிய உடம்பை ஒருபோதுமே எடுத்தறியாத கடவுள்! (புறப்பிலி என்பது கருத்து); ஒப்பற்ற வேதங்களும் தமக்கு அவனே முதல்வன் என்று துதிக்கும் முதற் கடவுளாகிய பெருமான்! அப்பெருமானைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்த பிற்பாடு, இருபது கண்களையுடைய இராவணனின் புதல்வனாகிய இந்திரசித்து, மாயா சீதையைக் கொல்வதைப் பார்த்து அழுத பைத்தியக்காரனையோ, ‘தெய்வம்' என்று கூறி நாமும் பிதற்றுவது? அது சற்றும் பொருத்தமல்லவே என்பது பொருள். "தெய்வமெனப் போற்றற்கு உரியது மாயையினாலே பற்றப்படாததும், பிறவியற்றதும் ஆகிய முழுமுதலே. அஃதன்றி, மாயா காரியமான உடலினை எடுத்துப் பிறந்தவனும், மாயா சீதையை இந்திரசித்தன் கொல்லக்கண்டு மதிமயங்கி அழுதவனும் ஆகிய மாயைக்கு உட்பட்ட ஒருவனையோ, நாம் தெய்வ மென்பது? என்கின்றனர். இதனால், நம்பியாரை வாயடக்கியதும் பெற்றனம். மேளமேன்? ராஜாங்கமேன்? தில்லையிலே, சபாநாயகர் பிச்சாடன வடிவுடனேயே திருவீதி வலம் வருகின்றனர். அவருக்குமுன் எக்காளம் முழங்கு கின்றது. யானை அணிபுனைந்து செல்லுகின்றது. மேளவாத்தியங் களின் ஒலியும் இடியொலி போன்று எழுகின்றது. குடை கொடி முதலிய ராஜாங்க விருதுகளும் செலுத்துகின்றன.