பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 65 “பிச்சாடன மூர்த்தியே! பிச்சை எடுக்க தெரு வீதியிலே புறப்படுகிறவர் தாமே நீர்? உமக்கு ஏன் ஐயா இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள்?’ என்று கேட்பவரே போலக் கவிஞர் அந்த ஊர்வலக் காட்சியை வியந்து போற்றுகின்றார். நச்சவரம் பூண்டதில்லை நாரதரே! தேவரீர் பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம் காளமேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும் மேளமேன் ராஜாங்க மேன்? (98) நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! நஞ்சினைக் கொண்ட பாம்பினை அணியாகப் பூண்டிருக்கும் தில்லை நகர்க்கு உரிய தலைவரான எம்பிரானே! தேவரீர் பிச்சை எடுத்து உண்ணும் பொருட்டாகவே திருவீதியிலே எழுந்தருளியும், உச்சிதமாம் - சிறப்புடையதான, காளம் ஏன் எக்காளம் எதற்காகவோ? குஞ்சரம் ஏன் யானையும் எதற்காகவோ? கார்க்கடல்போல் தான் முழங்கும்மேளம் ஏன்? - கருமையான கடலின் ஒலிபோல முழக்கமிடுகின்ற மேள வாத்தியங்கள் எதற்கோ? ராஜாங்கம் ஏன்? மற்றும்அரச விருதுகளும் எதற்காகவோ? "பிச்சைக்குப் போகையிலேயும் நுமக்கு இவ்வளவு தடபுடல்கள் எதற்கப்பனே?” என்கிறார் கவிஞர். சிவனும் அரங்கனும் சிதம்பரத்திலே கூத்தப்பிரானைப் போற்றிச் சொல்லிய அதே செய்யுளைத் திருவரங்கத்திற் சென்றபொழுது சொல்லி அரங்கநாதப் பிரானையும் போற்றினாய் காளமேகம். கண்டவர் வியப்புற்று நிற்க, இருகடவுளர்க்கும் ஏற்பப்பொருள் கூட்டி உரைத்து அவர்களைத் தெளிவு படுத்தினார், அந்த அருமையான செய்யுள் இது. இருந் தாரை கேள்வனை யோங்கு மராவை எழுபுனலைத் திருந் தாரை வன்னியை முடிமுடித் தோன்செய்ய வேளைப்பண்டு தருந் தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரிலன்று பொருந் தார் புரத்திட்ட தீப்போள் மதியம் புறப்பட்டதே! (99) சிவபெருமான் - அழகினாலே சிறப்புற்ற தாரையின் விருப்பத்திற்கு உரியவனான சந்திரனையும், படமெடுத்து உயரும் பாம்பினையும், எழுகின்ற புலனான கங்கையினையும், செவ்வை யான ஆத்திமாலையினையும், வன்னி மலரையும், முன்னாளிலே