பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 67 நல்ல காய்கறிகள் காய்க்கும் தோட்டமாகும்; மணம் நாறும் பூஞ்சோலைகளையுடைய தில்லையம்பலமே அவனுக்குரிய நாடக சாலையாகும். குறிப்பு: முப்புரம் எரித்தபோது திருமால் ரிஷபமாகித் தாங்கினான்; வேதங்கள் அப்போது தேர்க்குதிரைகளாயின; கண்ணப்பர் வாயிற் குதப்பியே ஊனைப் படைத்தார்; திருமால் தம் தாமரைக் கண்ணினைத் திருவடியிலே சார்த்திப் பெருமானைப் பூசித்தனர்; சிறுத் தொண்டரின் மனைவியின் வயிற்று வளர்ந்த பிள்ளைக்கறியினை விரும்பினர்; இவற்றை அமைத்துப் பாடிய முறையினைக் கற்று இன்புறுக! அன்னம் இரங்காமல் மதுரையிலே ஒரு சமயம் திருவிழா நிகழ்ந்து கொண் டிருந்தது. மீனாட்சியம்மை அன்னவாகனத்தே பவனிவந்து கொண்டிருந்தனள். அதனைக் கண்டு மிகவும் இன்புற்ற கவிஞர் இப்படிப் பாடுகின்றார். “சிவ பெருமான் ஒரு பித்தன். அவன் அப்படிப்பித்தன் ஆயினதனால், அவன் தேவி உணவும் உண்ணாது, வீதியிலே சோகத்துடன் இப்படி வந்து அலைந்து கொண்டிருக்கிறாளே” என்று பரிதாபப்படுகிறார் கவிஞர். மாயனார் போற்று மதுராபுரிச் சொக்க நாயனார் பித்தேறினா ரென்றே-நேயமாம் கன்னன்மொழி யங்கயற்கட் காரிகையாள் ஐயையோ அன்னமிறங் காமலலை வாள். (101) மாயனார் போற்றும் மதுராபுரிச் சொக்க நாயனார் பித்தேறினார் என்றே - மாயனான திருமாலும் துதிக்கின்ற சிறப்புடையவரான மதுராபுரியிற் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் பித்துக்கொண்டவர் ஆயினர் என்று கருதியே, நேயமாம் - அவரிடத்தே அன்புடையவளான, கன்னன் மொழி - கருப்பஞ்சாற்றைப் போல இனிக்கும் பேச்சும், அம்கயல் கண் - அழகிய கயல்போன்ற கண்களும் (உடைய) காரிகையாள், அழகுடையவளான மீனாட்சி அம்மையானவள், அன்னம் இறங்காமல் - அன்ன வாகனத்தைவிட்டு இறங்காமல் (சோறு தொண்டையில் இறங்காமல்), அலைவாள்; தெருவிலே பவனி வருவாள் (தெருவீதியிலே அலைவாள்); ஐயோ! (இரக்கக் குறிப்பு) அவள்நிலை இரங்கத் தக்கதே என்பது கருத்து.