பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் குதிரைக்காரன் மகன் மதுரையிலே காளமேகம் மீனாட்சியம்மையைத் தரிசனம் செய்துகொண்டிருந்தார். அருகிலிருந்த ஒருவர் விநாயக ப்க்தர், விநாயகரைப் பற்றிப் பாடுமாறு காளமேகத்தைக் கேட்டனர். கவிஞர், விநாயகரைக் குதிரைக்காரன் மகன்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டு இப்படிப் பாடுகிறார். நல்லதொரு புதுமை நாட்டிற்கண் டேனதனைச் சொல்லவா சொல்லவா சொல்லவா-தொல்லை மதுரைவிக்கி னேச்சுரனை மாதுமையாள் பெற்றாள் குதிரைவிற்க வந்தவனைக் கூடி. (102) நல்லதொரு புதுமை நாட்டிற் கண்டேன் - மிகவும் விந்தை யான ஓர் அதிசயத்தை இந்த நாட்டிலே கண்டேன்; அதனைச் சொல்லவா - அதனை உங்கட்கும் எடுத்துச்சொல்லவா? தொல்லை மதுரை விக்கினேச்சுரனை - பழமையான மதுரையம் பதிலே எழுந்தருளியிருக்கும் விக்கினேசுவரப் பெருமானை, மாது உமையாள் - உமை அம்மையானவள், குதிரை விற்க வந்தவனைக் கூடிப் பெற்றாள் - (மாணிக்கவாசகரின் பொருட்டாகக்) குதிரை வியாபாரியாக வந்த ஒருவனைக் (சிவபெருமானைக்) கூடியே பெற்றெடுத்தனள். 'குதிரைக்காரன் மகன் இந்த விநாயகன் என்று கூறி அந்த விநாயக பக்தரைத் திகைக்கச் செய்கிறார் கவிஞர். பிறகு, எப்படி என்று விளக்குகிறார். அக்காளை ஏறினார்! சிவபெருமான் ரிஷப வாகனத்தார். அவரை அவமானமாகப் பேசுவதுபோல ஆனால் போற்றுதற் பொருளோடு இப்படிக் காளமேகம் பாடுகின்றார். ஆலவாய்ச் சொக்கனைக் குறித்தது இது 'பெண்களைச் சுமந்த பித்தன், தங்கைக்கு மேலே நெருப்பை இட்டவன்; அக்காளைச்சேர்ந்தவன்' என வருவனவெல்லாம் முறையாகச் சிறந்த பொருள் தருவனவே என்பதனை உய்த்தறிக! கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார் பெண்டீர் தலைசுமந்த பித்தனார்-எண்டிசைக்கும் மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார் அக்காளை ஏறினா ராம். (103) கடம்ப வனத்து ஈசனார் - கடம்பவனத்து ஈசனாராகிய ஆலவாய்ப் பெருமான், பெண்டீர் தலைச்சுமந்த பித்தனார். தலையிற் கங்கையையும் இடப்பாகத்தே மலைமகளையும் என இரு பெண்களைச் சதா சுமந்துக்கொண்டேயிருக்கின்ற ஒரு பைத்தியக் காரர். அவர் என்ன செய்தார் தெரியுமா? எண்டிசைக்கும் மிக்கான